அதிரை நியூஸ்: ஜூன் 16
தஞ்சாவூர் மாவட்டம், கல்லணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, புதுச்சேரி மாநில வேளாண்மை, மின்சாரம் மற்றும் கல்வித் துறை அமைச்சர் கமலக்கண்ணன், மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் இன்று (16.06.2020) தண்ணீர் திறந்து வைத்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ம. கோவிந்தராவ் (தஞ்சாவூர்), டி.ஆனந்த் (திருவாரூர்), பி.உமா மகேஸ்வரி (புதுக்கோட்டை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சரால் கடந்த 12.06.2020 அன்று காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
மேட்டூரிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கல்லணையில் இருந்து விவசாய பணிகள் தொடங்குவதற்காக காவிரியில் 500 கன அடியும், வெண்ணாற்றிலிருந்து 500 கன அடியும், கல்லணைக் கால்வாயிலிருந்து 500 கன அடியும், கொள்ளிடத்திற்கு 500 கன அடியும் இன்று திறந்து விடப்பட்டுள்ளது. கல்லணை தலைப்பிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் கடைமடை பகுதிகளுக்கு; சென்றடைய தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
விவசாய தேவைக்காக குறுவை பாசனத்திற்கு தங்கு தடையின்றி தண்ணீரினை வழங்கிட வேண்டியுள்ளதால் விவசாயிகள் நீரினை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விவசாயிகள் நீரினை சிக்கனமாக பயன்படுத்தி பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் நீர்பங்கீட்டிற்கு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கல்லணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 4.5 லட்சம் ஏக்கர் நிலங்களும், திருவாரூர் மாவட்டத்தில் 3.9 லட்சம் ஏக்கர் நிலங்களும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 3.30 லட்சம் ஏக்கர் நிலங்களும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 0.27 லட்சம் ஏக்கர் நிலங்களும், கடலூர் மாவட்டத்தில் 1.00 இலட்சம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும்.
மேலும், நடப்பாண்டில் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் ஏற்கனவே பயிரிடப்பட்டுள்ள 1.63 லட்சம் ஏக்கர் குறுவை பயிர்களும் பயனடையும். கல்லணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் காவிரி பாசன பகுதிகளில் கடைமடை சென்றபின்னர், புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்திற்கு உரிய நீர் பங்கீடு அளிக்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ் மகேஷ்வரன், சட்ட மன்ற உறுப்பினர்கள் சி.வி.சேகர் (பட்டுக்கோட்டை), மா.கோவிந்தராசு (பேராவூரணி), ஆறுமுகம் (கந்தர்வக்கோட்டை), தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன், ஒருங்கிணைந்த பால்கூட்டுறவு சங்கத்தலைவர் ஆர்.காந்தி, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் இராம.இராமநாதன், ரெத்தினசாமி, தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன், வேளாண்மை துறை இணை இயக்குனர் ஜஸ்டின், வருவாய் கோட்ட அலுவலர் திருமதி.வேலுமணி மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.