.

Pages

Tuesday, June 16, 2020

ZOOM செயலி மூலம் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 77-வது மாதாந்திரக்கூட்டம் (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜூன் 16
கடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 77-வது மாதாந்திரக் கூட்டம் கடந்த 12/06/2020 ZOOM-APP எனும் காணொளி மூலம் நடைபெற்றது. அதில் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி நிரல்:- 
கிராஅத்                 :  அஹமது அஸ்ரப் ( துணை தலைவர் )
முன்னிலை          : S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை      : N.அபூபக்கர் ( பொருளாளர் )
சிறப்புரை             : A.M.அஹமது ஜலீல் ( செயலாளர் )
சிறப்பு அழைப்பாளர்: ஹாஜி எஸ்.ஏ அப்துல் ஹமீது செயலாளர் (ABM தலைமை அலுவலகம்)
அறிக்கை வாசித்தல்  : ஷேக் மன்சூர் ( துணை செயலாளர் )
நன்றியுரை    :  A. சாதிக் அகமது  (இணைத்தலைவர்)

தீர்மானங்கள்:
1) வர இருக்கும் ஹஜ்ஜூப் பெருநாள் கூட்டு குர்பானி விஷயமாக கலந்துரையாடப்பட்டு அதில் தலைமையகத்தின் மூலம் தீர்மானிக்கப்பட்ட பங்கின் கூட்டு குர்பானி தொகை ரூ.2200/- என்பதனையும், சிறந்த முறையில் கூட்டு குர்பானி மற்றும் தனி நபர் குர்பானி செயல்பட்டு வரும் அதிரை பைத்துல்மாலின் மூலம் நாமும் பங்கு பெறுவதென்றும் அதன் மூலம் ஆர்வமுள்ள நபர்களை அடுத்த கூட்டத்தில் பெயர்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

2) ABMR மாதாந்திர சந்தாவை இனி நமது வாட்ஸ் அப் குரூப் மூலம் சந்தா தொகையை வசூல் செய்து அதனை தலைமையகத்திற்கு அனுப்பி சேவைகள் மேம்படுத்த முழு ஒத்துழைப்பு செய்வதென தீர்மானிக்கப்பட்டது. மேலும் இந்த சிறு உதவிகளை எல்லா மாதங்களும் முழு ஆதரவு தருமாறு அனைவர்களிடமும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

3) இறைவனின் உதவியால் ரமலான் கிட், ஜக்காத், பித்ரா மற்றும் சந்தா போன்ற நிதிகளை வாரி வழங்கிய நமது ABMR-ன் சேவைகளை திறம்பட செய்ய உறுதுணை செய்த அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் உறுப்பினர்கள் அனைவருக்காகவும் துஆ செய்யப்பட்டது. மேலும் தற்போதைய காலகட்டங்களில் பல சிரமத்திற்கேற்ப உதவி பொருட்களை சரியான நேரத்தில் சரியான நபரை சென்ற அடைய முயற்சி செய்து ஒத்துழைத்த அனைவர்களுக்கும் இக்கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

4) கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இறையடி சேர்ந்த மர்ஹும் அதிரை அஹமது, மர்ஹும் ஜெ.ஜெ சாகுல் ஹமீது ஆகியோருக்கும், கரோனா பாதிப்பில் உலகளவில் உயிரிழந்த அனைத்து சகோதர சகோதரிகளுக்காகவும் அவர்களின் மருமைக்காகவும் இக்கூட்டத்தில் துஆ செய்து இனிதே நிறைவடைந்தது.

5) ZOOM-APP-ல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்த ABM தலைமை அலுவலக செயலாளர் ஹாஜி. எஸ்.ஏ அப்துல் ஹமீது அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

6) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு ஜூலை மாதம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் அதில் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.