அதிராம்பட்டினம், ஜூன் 13
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் அதிரை அஹ்மத் (வயது 72). இவர், தமிழ் இலக்கியங்கள் மீது அதிக பற்று கொண்டவர். எழுத்தாளர், கவிஞர், சமூக ஆர்வலர் என பன்முகத் தன்மை கொண்டவர். முத்துப்பேட்டை அல் மஹா மகளிர் அரபிக் கல்லூரியில் சில ஆண்டுகள் முதல்வராக பொறுப்பேற்று இஸ்லாமிய மார்க்க கல்வியை போதித்தவர். 40 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கும் இவரை 'தமிழறிஞர்' என அனைவரும் அன்புடன் அழைப்பர்.
இந்நிலையில், கடந்த மே.30 ந் தேதி அவரது இல்லத்தில் வஃபத்தானார். இவரது மறைவுக்கு, மனிதநேய ஜனநாயக் கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமாகிய தமீமுன் அன்சாரி எம்.எல்.ஏ, இன்று சனிக்கிழமை அதிராம்பட்டினம் அதிரை அஹ்மத் அவர்களின் இல்லத்திற்கு வருகை தந்து அவரது உறவினர்கள் மு.கி அபூபக்கர், ரபீக் அகமது, வழக்குரைஞர் இசட். முகமது தம்பி, அபுல் ஹசன் சாதலி ஆகியோரிடம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார். அப்போது, அவரது குடும்பத்தார் அதிரை அஹ்மத் எழுதிய 'நபி (ஸல்) வரலாறு' பற்றிய நூலை அன்பளிப்பாக வழங்கினர்.
அப்போது, அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் மதுக்கூர் ராவூதர்ஷா, நாச்சிகுளம் தாஜுதீன் மற்றும் மாவட்ட, மற்றும் அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள் அதிரை சேக், ஸ்மார்ட் சாகுல், அப்துல் சமது, அஸ்ரப், மர்ஜூக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.