அதிரை நியூஸ்: ஜூன் 18
தமிழ்நாட்டில் வேலைநாடும் இளைஞர்களையும், வேலை அளிக்கும் தனியார் துறை நிறுவனங்களையும், இணையவழியாக இணைத்து, வேலைவாய்ப்புகளை பெற்று தரும் நோக்கத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறையின், வேலைவாய்ப்பு பிரிவால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையம் “Tamil Nadu Private Job Portal” ( www.tnprivatejobs.tn.gov.in ) என்ற இணையதளம், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 16.06.2020 அன்று துவக்கி வைக்கப்பட்டது.
தனியார் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்கள் இவ்விணையதளத்தில் நேரடியாக பதிவு செய்து தங்கள் கல்வி தகுதி, முன்அனுபவம் ஆகியவற்றிற்கு ஏற்ற பணிவாய்ப்புகளை பெறுவதற்கும், தனியார்துறை சார்ந்த அனைத்து சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் காலிப்பணியிடங்களை இவ்விணையதளத்தில் பதிவேற்றம் செய்து அப்பணிகாலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்து பணி நியமனம் வழங்குவதற்கும் இவ்விiணையதளம் வழிவகை செய்கிறது.
வேலை அளிப்போர் மற்றும் வேலை நாடுநர்களுக்கு இச்சேவை கட்டணம் ஏதுமின்றி முற்றிலும் இலவசமாக தமிழக அரசால் வழங்கப்படுகிறது. ஏற்கனவே அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களால் சிறிய மற்றும் பெரிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்புகள் வழங்கப்பட்டு வந்தது.
தற்போதைய சூழ்நிலையில், இதற்கு மாற்றாக தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையதளம் மூலம் இணையவழி நேர்காணல் மற்றும் இணையவழி பணி நியமனம் ஆகிய வசதிகளை பயன்படுத்தி அதிக எண்ணிக்கையில் தமிழ்நாட்டிலுள்ள வேலைநாடும் இளைஞர்களை இணைய வழியாக தொடர்பு கொண்டு தனியார்துறை வேலையளிப்போர்களை பணி வாய்ப்புகளை அளிப்பதற்கான அரிய சேவை உருவாக்கி தரப்பட்டுள்ளது.
எனவே தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வேலைதேடும் இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தனியார் துறையில் பணிவாய்ப்பினை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.
மேலும் விபரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் அவர்களை ( தொலைபேசி எண். 04362 237037 ) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.