அதிரை நியூஸ்: ஜூன் 08
தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிய தொழில் தொடங்க முன்வரும் இளைஞர்களுக் ரூ.5 கோடி வரை கடன் வழங்கப்படும் என்று மாவட்ட தொழில் மையம் அறிவித்துள்ளது.
படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளித்து அவர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழக அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS (New Entrepreneur -cum- Enterprise Development Scheme)) என்ற திட்டத்தை கொண்டுவந்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு (டிப்ளோமோ )/ ஐ.டி.ஐ
/ அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிலையம் மூலம் பெறப்பட்ட தொழில் பயிற்சியை கல்வித்தகுதியாக பெற்றிருப்போர் தேர்வு செய்யப்பட்டு ஒரு மாத காலம் தொழில் முனைவோர் பயிற்சி அளித்து, தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்த பின்னர், வங்கிகள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படும். அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 23 எண்கள் (மானியம் 225 லட்சம்) என இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், திட்ட மதிப்பீடு ரூ.10 இலட்சத்திற்கு மேல், அதிகப்பட்சமாக ரூ.5 கோடி வரையிலான உற்பத்தி சார்ந்த தொழில்கள், சேவை சார்ந்த தொழில் துவங்கலாம். பொதுபிரிவினர் தனது பங்காக 10 சதவீதமும், சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும் செலுத்த வேண்டும். வணிக வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் கடன் பெற பரிந்துரை செய்யப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பட்டப்படிப்பு (Degree), பட்டயப் படிப்பு (Diploma), I.T.I, அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழில் பயிற்சிகளைப் (Vocational Training from recognized Institutions) பெற்றவர்கள் NEEDS (New Entrepreneur -cum- Enterprise Development Scheme) பெற்றிருக்க வேண்டும். திட்டத்தில் பயனடைய 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினராக இருப்பின் 35 வயதிற்குள்ளும், சிறப்புப்பிரிவினர்களான மகளிர், ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், சிறுபான்மையினர் ஆகியோருக்கு 45 வயது ஆகும். பயனாளிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை.
இத்திட்டத்தில் தொழில் துவங்கும் தொழில் முனைவோருக்கு நிலையான முதலீட்டில் 25 சதவீதமும், (அதிகபட்சமாக 30 இலட்சம் வரை) முதலீட்டு மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படுகிறது.
சிறப்பு பிரிவினரான மகளிருக்கு இத்திட்டத்தின் கீழ் 50 சதவீத ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் தலைமையிலான தேர்வு குழுவினரால் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். ஆர்வமுள்ள படித்த தொழில் முனைவோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
இத்திட்டத்திற்காக விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி: www.msmeonline.tn.gov.in/needs ஆகும். மேலும் விவரங்களுக்கு, பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், தஞ்சாவூர் அலுவலகத்தினை தொடர்புகொள்ளவும். (தொலைப்பேசி 257345 / 255318)
ஆர்வமுள்ள தொழில் முனைவோர் இத்திட்டத்தின் கீழ் பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.