.

Pages

Friday, June 5, 2020

சம்சுல் இஸ்லாம் சங்கம் நூற்றாண்டு விழா குர்ஆன் கிராத் போட்டி வெற்றியாளர்கள் (முழு விவரம்)

அதிரை நியூஸ்: ஜூன் 05
அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, ஷிஸ்வா (Shamsul Islam Sangam Welfare Association) அமைப்பின் அமீரக கிளை சார்பில், வாட்ஸ்அப் சமூக வலைத்தளம் மூலம் குர்ஆன் கிராஅத் போட்டி அண்மையில் நடத்தப்பட்டது.

இதில், அதிராம்பட்டினம், சென்னை, அமீரகம், சவுதி அரேபியா, அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா, கத்தார் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசிக்கும் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகளின் சிறார்கள் மொத்தம் 464 பேர் போட்டியில் கலந்துகொண்டனர். போட்டியில் சிறப்பிடம் பிடித்த வெற்றியாளர்கள் பற்றிய அறிவிப்பு நிகழ்ச்சி புதுமனைத்தெரு சம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்வுக்கு, சங்கத் தலைவர் ஹாஜி எம்.எஸ்.எம் முகமது அபூபக்கர் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக, மவ்லவி ஏ.எஸ் அகமது இப்ராஹீம், மவ்லவி எம்.எஸ் அப்துல் ஹாதி ஆகியோர் கலந்துகொண்டு, குர் ஆன் கற்றலின் அவசியம் பற்றியும், போட்டி நடத்திய விதம் பற்றியும் மற்றும் தேர்வானவர்கள் பற்றியும் எடுத்துரைத்தனர்.

பின்னர், சங்க செயலாளர் ஹாஜி எம்.ஏ அப்துல் காதர் கிராத் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பற்றிய விவரங்களை அறிவித்தார்.

இதில், 4 வயதுக்கு உட்பட்ட பிரிவில்.... 
ஏ.முகமது (முதலிடம்), டி.தஸ்பீஹா (இரண்டாமிடம்), எம்.எஸ் ஷனா, எம்.உஜைர், எஸ்.கதீஜா, எம்.ஹதீஜா, ஆர்.முகமது அயான் ஆகிய 5 பேர் மூன்றாமிடமும் பிடித்தனர்.

இதில், 5 ~ 7 வயதுக்கு உட்பட்ட பிரிவில்....
எஸ். கதீஜா (முதலிடம்), எம்.ரம்லா (இரண்டாமிடம்), எம்.ஜெய்னா, எம் ஷபீனா, எச்.முகமது, பி.சல்வா, எச். நுஸைபா ஆகிய 5 பேர் மூன்றாமிடமும் பிடித்தனர்.

இதில், 8 ~ 13 வயதுக்கு உட்பட்ட பிரிவில்....
ஏ.அஜீம் (முதலிடம்), ஏ.கிஃபாயத்துல்லா (இரண்டாமிடம்), எம்.முகமது சமீஹ், ஏ.சுஹைல், எம்.ஐ உசைத், ஏ.உமர் ஆபத், எச். மஹ்ரூஸ் ஆகிய 5 பேர் மூன்றாமிடமும் பிடித்தனர்.

ஓவ்வொரு பிரிவுகளிலும் முதலிடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ. 3 ஆயிரமும், இரண்டாமிடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ. 2 ஆயிரமும், மூன்றாமிடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ. ஆயிரமும் பரிசுகள் அறிவிக்கப்பட்டன. மேலும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் ரூ.400 மதிப்பிலான சுவர் கடிகாரம் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, சம்சுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்க செயலர் எம்.எப் முகமது சலீம் வரவேற்றார். நிறைவில், சம்சுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்கத் தலைவர் அகமது அனஸ் நன்றி கூறினார். இந்நிகழ்வில், சங்க இன்னாள், முன்னாள் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.