.

Pages

Monday, June 8, 2020

அமீரகத்தில் குர்ஆன் ஓதும் கிராத் போட்டியில் அதிரை சிறுவன் தொடர் சாதனை!

சாதனை சிறுவன் ஏ.அஜீம்
அதிரை நியூஸ்: ஜூன் 08
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் என்.அப்துல் காதர். அபுதாபி நிதியமைச்சகத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் அஜீம் (வயது 11). அபுதாபி குளோபல் இந்தியன் சர்வதேச பள்ளியில் 7 ஆம் வகுப்பு மாணவர். இவர், பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குர்ஆன் ஓதும் கிராத் போட்டிகளில் வெற்றி பெற்று பல்வேறு பரிசுகளை வாரிக் குவித்து வருகிறார்.

இந்நிலையில், அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, ஷிஸ்வா (Shamsul Islam Sangam Welfare Association) அமைப்பின் அமீரக கிளை சார்பில், வாட்ஸ்அப் சமூக வலைத்தளம் மூலம் குர்ஆன் கிராஅத் போட்டி அண்மையில் நடத்தப்பட்டது. இதில், 8 ~ 13 வயதுக்கு உட்பட்ட பிரிவில், ஏ.அஜீம் முதலிடம் பிடித்து சாதனை நிகழ்த்தி உள்ளார்.

இதுதவிர, தமிழ்நாடு பீஸ் அகெதமி நடத்திய குர்ஆன் பிழையின்றி ஓதுதல் (tarteel) போட்டியில் முதலிடமும், அபூதாபி மலையாளி சமஜாம் நடத்திய போட்டியில் மூன்றாமிடமும், தனது 3 வது வயதில் துபை எதிசலாத் நடத்திய குர்ஆன் கிராத் போட்டியில் முதலிடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
மேலும், துபை அல் மனார் சென்டர் நடத்திய போட்டியில் பங்கேற்பு சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிழையின்றி ஓதியது, மொழி உச்சரிப்பு, இனிமையான குரல்வளம் ஆகியன சிறப்பிடம் பெறுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. குர்ஆன் ஓதும் கிராத் போட்டியில் தொடர் சாதனை படைத்து வரும் சிறுவன் அஜீமை, குர்ஆன் பயிற்றுவித்த ஆசிரியர்கள், பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் பாராட்டி உற்சாகப்படுத்தி வருகின்றனர்.  மேலும், வகுப்பில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் முதல் இடம் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர் சாதனை குறித்து சிறுவன் ஏ.அஜீம் நம்மிடம் கூறியது;
எனது சிறு வயது முதல் குர்ஆன் ஓதும் ஆர்வத்தை புரிந்துகொண்டு எனது பெற்றோரும், உறவினர்களும் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வந்தனர். எனது உஸ்தாத்மார்கள் (குர்ஆன் பயிற்றுநர்கள்) பிழையின்றி ஓதுதல், மொழி உச்சரிப்பு, குரல்வளம் ஆகியவற்றில் போதிய பயிற்சி அளித்து வருகின்றனர். மேலும், அவர்களின் வழிகாட்டுதல் போட்டிகளில் வெற்றி பெற எனக்கு பெரும் உதவியாக உள்ளது. உலகக்கல்வியோடு, மார்க்கக் கல்வியையும் முழுமையாக கற்றறிந்து, அவற்றை பிறருக்கு கற்றுக்கொடுப்பது எனது எதிர்கால லட்சியம் என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.