அதிரை நியூஸ்: ஜூன் 20
தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 90 நபர்களுக்கு மனநல ஆலோசனைகள் மொபைல் போன் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இயங்கிவரும் மனநல பிரிவின் மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஏற்படும் தேவையற்ற அச்சம், மன அழுத்தம், மது, போதை போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையானவர்களுக்கு ஏற்படும் மனச்சோர்வு போன்ற அனைத்து மனநலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கும் மொபைல் போன் மூலம் மனநல ஆலோசனை வழங்கப்படுகிறது.
கரோனா வைரஸ் போன்ற அசாதாரண சூழலில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பொதுமக்களுக்கு மொபைல் போன் மூலம் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு கடந்த மார்ச் 29 ஆம் தேதி முதல் ஜூன் 18-ஆம் தேதி வரை சுமார் 90 நபர்களுக்கு மனநல ஆலோசனைகள் மொபைல்போன் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, கொரோனா வைரஸ் குறித்த தேவையற்ற பயம், பதற்றம், மது, போதை போன்ற பழக்கங்களினால் ஏற்படும் மனப்பதட்டம், கவலை மற்றும் பிற மனநலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கும் ஆலோசனை பெற 9786253527, 9751849953, 9442404953 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.