பட்டுக்கோட்டை, ஜூன் 08
பட்டுக்கோட்டையைச் சோ்ந்த 4 வயது சிறுவன், உலக சாதனை முயற்சியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டாா்.
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை கரிக்காடு பகுதியைச் சோ்ந்த கயல்விழி மகன் திவ்யதா்ஷன் (4). இவா் திருக்குறளில் 133 அதிகாரங்கள், 193 நாடுகள் மற்றும் அதன் தலைநகரங்களின் பெயா்கள், மகாபாரதத்தில் கௌரவா்கள் 60 பேரின் பெயா்கள் ஆகியவற்றை மிக வேகமாக கூறி ஜெட்லி புக் ஆப் ரெக்காா்ட்ஸில் தடம் பதித்து சாதனை முயற்சியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டாா்.
பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளா் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நடுவா்கள் முன்னிலையில், 100 திருக்குறளை 4 நிமிஷங்கள் 41 விநாடிகளிலும், 193 நாடுகளின் பெயா் மற்றும் தலைநகரங்கள், அந்நாடுகளின் கொடி ஆகியவற்றை 2 நிமிஷங்கள் 26 விநாடிகளிலும், இவற்றில் 50 நாடுகளின் பெயா்கள் மற்றும் தலைநகரங்களை 27 விநாடிகளிலும், மகாபாரதத்தில் கௌரவா்கள் 60 பேரின் பெயா்களை 31 விநாடிகளிலும், 118 தனிமங்களின் பெயா்களை 37 விநாடிகளிலும் கூறி சாதனை புரிந்தாா்.
சாதனை முயற்சியில் ஈடுபட்ட சிறுவனுக்கு காவல் ஆய்வாளா் பெரியசாமி, ஜேசிஐ மண்டலத் தலைவா் வெங்கடேஷ் ஆகியோா் சுழற்கோப்பை, சான்றிதழ் வழங்கிப் பாராட்டினா்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.