.

Pages

Thursday, August 21, 2014

துபாய் மருத்துவமனையில் 12 மாதமாக கோமாவில் இருந்து தமிழக தொழிலாளி தமிழகம் புறப்பாடு !

துபை மருத்துவமனையில் பனிரெண்டு மாதமாக இருந்து வரும் தமிழக தொழிலாளி : துபாய் அரசு - இந்திய கன்சுலேட் - துபை ஈமான் அமைப்பு - இந்திய மற்றும் தமிழக அரசு ஆகியவற்றின் உதவியுடன் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்க இன்று புறப்படுகிறார் !

துபை : துபை மருத்துவமனையில் கடந்த 2013 ஜுன் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக சேர்க்கப்பட்ட நடராஜன் ராமலிங்கம் ( வயது 41 ) தற்பொழுது கோமோ நிலையில் இருந்து வருகிறார்.

இவர் சிதம்பரத்தைச் சேர்ந்தவர். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன். மற்றொரு மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கும் போது இறந்து விட்டார்.

மருத்துவ நிர்வாகம் முயற்சிகள் பல மேற்கொண்டும் நடராஜன் ராமலிங்கம் கோமோ நிலையில் இருந்து திரும்பவேயில்லை. எனவே மருத்துவமனை நிர்வாகம் அவரை தாயகம் கூட்டிச் செல்ல அவரது கம்பெனிக்கு அறிவுறுத்தியுள்ளது.

கம்பெனி துபையில் இன, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு சமுதாயப் பணியில் ஈடுபட்டு வரும் ஈமான் அமைப்பினை அணுகினர்.

இவரது குடும்பம் ஏழ்மையின் காரணமாக வாடகை கொடுக்கக் கூட வசதியின்றி தெரிந்தவர்கள் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவரை வீட்டுக்கு கூட்டிச் சென்று மருத்து சிகிச்சை அளிக்க இயலாத நிலையில் அவரது குடும்பத்தினர் இருந்து வருகின்றனர்.

எனவே தமிழக அரசு இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தமிழக மருத்துவமனையில் இவரை அனுமதிக்க உதவிட துபை ஈமான் அமைப்பின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதனையடுத்து தமிழக அரசு மறுவாழ்வுத்துறை கமிஷனர் அலுவலக கடிதம் எண் E1 / 3703 /2014 dt. 02.05.2014 துபை இந்திய துணைத்தூதரகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது.

இப்பணிகளுக்கு மறுவாழ்வுத்துறை இயக்குநரகத்தின் கமிஷனர் ஆனந்த் ( 044-28515288 ), துணை ரிஜிஸ்டர் மோகன்ராஜ் ( 044-28525648 ) மற்றும் அவரது அலுவலக நலத்துறை அலுவலர் உள்ளிட்டோர் மனிதாபிமான அடிப்படையில் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்க அனுமதி பெற்றுள்ளனர்.  நடராஜனின் குடும்பத்தினர் பாண்டிச்சேரியில் இருப்பதால் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர்.

இதனையடுத்து நடராஜன் இன்று ( 21 ஆகஸ்ட் 2014 ) இரவு ஏர் இந்தியா AI 906 விமானத்தில் ஸ்ட்ரச்சர் மூலம் துபையில் 2330 மணிக்கு  புறப்பட்டு காலை 05.00  மணிக்கு சென்னை விமானநிலையம் வந்தடையும்.

அதன் பின்னர் தமிழக அரசின் 108 அவசர ஊர்தி சேவை மூலம் பாண்டிச்சேரிக்கு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்படுவர்.

இவருடன் ஈமான் அமைப்பின் துணைப் பொதுச்செயலாளர் திருப்பனந்தாள் ஏ முஹம்மது தாஹா, மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், பவர் குரூப் அலுவலர் கோவை தேவராஜ், துபை மருத்துவமனையின் செவிலியர் உள்ளிட்டோர் வருகின்றனர்.

பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனிக்கு காலை 10 மணியளவில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பணிகளுக்கு உறுதுணையாக இருந்து அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விபரங்களுக்கு : 
திருப்பனந்தாள் ஏ. முஹம்மது தாஹா, துணைப் பொதுச்செயலாளர், ஈமான் 00971 50 467 43 99 / 0091 8012 459 459

முதுவை ஹிதாயத் 00971 50 51 96 433  /  0091 965 9644 786

மின்னஞ்சல் : muduvaihidayath@gmail.com /  info@imandubai.com

உள்ளிட்ட மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.

நடராஜன் மனைவி தொடர்பு முகவரி :
N.EAZHILARASI,
C/O, R .ANBAJAGAN,
NO:02,FIRST FLOOR
MUTHAALAMMAN KOVIL STREET,PAVAZHA NAGAR,
PONDICHERRY 605005.

Mrs.Ezhilarasi Natarajan: 00918940153338
Natarajan son: 00919003861341

செய்தி மற்றும் படங்கள் : முதுவை ஹிதாயத்


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.