.

Pages

Friday, August 22, 2014

AJ பள்ளி ஜும்மா தொழுகைக்கான பணிகள் தீவிரம் !

AJ நகர் பொதுமக்களின் வேண்டுகோளுகிணங்கவும், அதிரை உலமா சபை மற்றும் அதிரை நகர ஜமாத்தினரின் ஒத்துழைப்புடனும் இன்று ( 22-08-2014 ) வெள்ளிக்கிழமை முதல் ஜும்மா தொழுகை துவங்க இருப்பதையொட்டி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

முதல் ஜும்மா தொழுகை சிறப்பாக நடத்தி முடித்திட வேண்டும் என்பதற்காக களத்தில் மும்முரமாக இறங்கியுள்ளனர். இதற்காக பள்ளி நிர்வாகிகள் இரவு பகலாக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் அப்பகுதி இளைஞர்கள் ஊர் முக்கியஸ்தர்கள் தானாக முன்வந்து ஆர்வத்துடன் உதவி வருகின்றனர்.

இன்றைய முதல் நாள் ஜும்மா தொழுகையில் பேராசிரியர் பர்கத் அவர்களின் சிறப்புரையோடு துவங்க இருக்கிறது. இதனை தொடர்ந்து ஜும்மா பயானை இத்ரீஸ் ஆலிம் நிகழ்த்த, குத்பா உரையை பள்ளியின் இமாம் முஹம்மது ஹுசைன் ஆற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி நிர்வாகம் - மஹல்லா வாசிகளின் சார்பில் அனைவரும் தொழுகையில் கலந்து கொள்ள அழைப்பு விடப்பட்டுள்ளது. இதற்காக நகரின் முக்கிய பகுதிகளில் அறிவிப்பு தட்டி வைக்கப்பட்டுள்ளது. தொழுகையில் கலந்து கொண்டு சிறப்பிப்பவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் உணவு பொட்டலங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது.








No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.