.

Pages

Wednesday, August 20, 2014

விவசாயத்திற்காக நசுவினி காட்டாறு அணை இன்று திறப்பு !

மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கல்லணையை வந்தடைந்தது. கல்லணையிலிருந்து டெல்டா சாகுபடிக்காக  தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து கடைமடை பகுதிகளில் தண்ணீர் தவழ்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

பட்டுக்கோட்டை தாலுக்காவில் உள்ள தம்பிக்கோட்டை வாய்க்கால், தம்பிக்கோட்டை வடகாடு வாய்க்கால், கல்யாண ஓடை வாய்க்கால், வெண்டாக்கோட்டை வாய்க்கால், ராஜாமடம் வாய்க்கால், நரசிங்கபுரம் வாய்க்கால், புதுக்கோட்டை உள்ளூர் செல்லிக்குறிச்சி ஏரி பாசன வாய்க்கால், நசுவினி ஆறு மங்கனங்காடு படுகை வாய்க்கால், மகாராஜபுரம் சித்தேரி அனைக்கட்டு வாய்க்கால், தொக்காலிக்காடு காமராஜ் அணைக்கட்டு வாய்க்கால், அலிவலம் வாய்க்கால் வேதபுரி அனைக்கட்டு வாய்க்கால் ஆகியன உள்ளது. இப்பகுதியை சுற்றி 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடைபெறும் விவசாயத்திற்கு வாய்க்கால்களில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரே முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.

இன்று காலை பட்டுக்கோட்டை அருகே உள்ள வெண்டாக்கோட்டை காட்டாறு அணையிலிருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சரோஜா மலை அய்யன், தஞ்சை மாவட்ட அதிமுக இளைஞரணி செயலாளர் ஜெய பிரகாஷ் நாராயணன், அதிமுக பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், கல்லணை கோட்ட அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.