.

Pages

Wednesday, August 13, 2014

அதிரையில் கட்டி முடித்து 5 ஆண்டுகளுக்கு பிறகு திறப்பு விழா காணப்பட உள்ள சுகாதார வளாகம் !

அதிரை தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி மேலத்தெரு. இந்த பகுதியில் திறந்த வெளியில் மலம் கழிப்பதை முழுமையாக தவிர்க்கும் பொருட்டு நபார்டு திட்டத்தின் கீழ் 2008-2009 ஆம் ஆண்டிற்கான நிதி ரூபாய் 6 லட்சம் ஒதுக்கீட்டில் பெண்கள் பயன்படுத்தும் வகையில் நவீன வசதியில் சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த வளாகம் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் இருந்ததால் பாழடைந்து காணப்பட்டது. விரைவாக திறக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் தொடர் கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர்.

தற்போது அதிரை பேரூராட்சி நிர்வாகம் சுகாதார வளாகத்தை திறப்பதற்கு உரிய முயற்சியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. இதற்காக இன்று காலையில் அதிரடியாக துப்புரவு ஊழியர்கள் மூலம் வளாகத்தை சுத்தம் படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபடுத்தி வருகிறது.

இதுகுறித்து துப்புரவு தொழிலாளர்கள் நம்மிடம் கூறியதாவது...
'சுகாதார வளாகம் நீண்ட காலமாக திறக்கப்படாமல் பராமரிப்பின்றி இருந்து வந்தது. இதனால் அசுத்தங்கள் அதிகமாக் காணப்பட்டன. இன்று காலை முதல் அசுத்தங்கள் அனைத்தையும் அப்புறப்படுத்தி வருகின்றோம்' என்றனர்.







     

5 comments:

  1. ஒருபுறம் கழிப்பிட வசதியின்மையால் பாலியல் வல்லுறவுக்கு ஆட்பட்டு இரு தலித் சகோதரிகள் படுகொலை செய்யப்பட்டது கடந்த மாதம் இந்தியாவே அதிர்ந்தது.

    இன்னொரு புறம் ஆறு இலட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டு ஐந்தாண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு வராமல் இருந்த சுகாதார வளாகம்.

    தேர்தல் பொறுப்பு முடிந்து வீடு திரும்பியவர் கழிப்பிடத்திற்காக ஒதுங்கிய போது இரயில் அடிபட்டு இறந்ததை பற்றி திரு ஞானி சங்கரன் அவர்கள் சொன்னது தான் நினைவிற்கு வருகிறது.

    அவர் சொன்னது, 'நானாக இருந்தால் வெட்கப்படாமல் அங்கிருந்த வீட்டில் அனுமதி கேட்டிருப்பேன்'.

    இதனை அப்பகுதி மக்களும் அக்கறை செலுத்தி திறக்க முயற்சிக்கவில்லை என்பது வெட்கக் கேடானது.

    இதனைப் பற்றி குறிப்பிட்டு எழுத காரணம், குறிப்பிட்ட காலம் வரை சிறுவயதில் திறந்த வெளியில் தான் கழிப்பிடம் சென்றிருக்கிறோம், 1990களுக்குப் பிறகுதான் எங்கள் வீட்டிற்கு, ஏன் அநேக வீட்டிற்கு கழிப்பிட வசதி வந்தது.

    ஆனால் தற்போதும் ஊரில் திறந்த வெளியில் செல்பவர்கள் இன்னும் அதிகம் இருக்கத்தான் செய்கிறார்கள். வெளிநாட்டில் சம்பாதித்து எங்கிருக்கிறது என்பதே தெரியாமல் வாங்கி வைக்கும் அநேகரின் மனைகள் இன்னும் பீக்காடாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete
  2. விளையாட உருப்படியான மைதானங்கள் இல்லை. தனியார் விளையாட்டு இடங்களில் செல்லும் வழிநெடுகிலும் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லவேண்டியுள்ளது.

    ReplyDelete
  3. பெரும்பாலான வீடுகளில் இன்றும் பிளாஸ்டிக் பைகளில் கட்டி குப்பையோடு குப்பையாக போடும் அவலம் இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. இதையெல்லாம் கண்டெடுத்து பேரூராட்சி நிர்வாகம் நிவர்த்தி செய்யவேண்டும்..

    ReplyDelete
  4. நல்லதே நடக்கட்டும்

    ReplyDelete
  5. பயன்பாட்டுக்கு வந்த ஒரு சில மாதங்களிலேயே பயன்படுத்த முடியாத அளவுக்கு, சுத்தம் பேணப்படாததால் விழலுக்கு இறைத்த நீராய், நீர் வரத்து சரிவர இல்லாமல் வீணாகிறது. அதிலும் தொடர்ந்து கவனம் செலுத்தவேண்டும் பேரூராட்சி

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.