அபுதாபி இந்திய தூதரகத்தில் இந்திய தூதர் டி.பி. சீதாராமன் இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்து பாரத குடியரசுத் தலைவரின் சுதந்திர தின உரையினை வாசித்தார். அதனைத் தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
துபாய் இந்திய துணைத் தூதரகத்தில் இந்திய கன்சல் ஜெனரல் அனுராக் பூஷன் இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்து பாரத குடியரசுத் தலைவரின் சுதந்திர தின உரையினை வாசித்தார். அமீரகத்துக்கும் இந்தியாவுக்கும் இடையேயான நட்புறவு குறித்து பெருமிதம் தெரிவித்தார். இந்தியா சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகளானாலும் என்றும் இளமையாகவே இருந்து வருகிறது எனக் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை அமீரகத்தில் விடுமுறை நாளாக இருந்த காரணத்தினால் இந்தியர்கள் அதிக அளவில் பங்கேற்றனர்.
செய்தி மற்றும் படங்கள் :
முதுவை ஹிதாயத்
அன்புள்ளம் கொண்ட நாட்டு பற்று மிக்க அதிரை வலைதள சகோதரர்களே ............நமது நாட்டின சுதந்திர தின விழா கொண்ட்டாங்களை ஒட்டு மொத்த ஒரே விரிவான ஒரே பதிவில் நமதூரின் நிகழ்ச்சிகள் மற்றும் புகைப்படங்கள் அனைத்தையும் வெளியிட்டால் அது அனைவருக்கும் நலம் ......வெளிநாட்டு வாசகர்கள் நேரமின்மை காரனமாக ஒவ்வொரு பதிவையும் உற்றுநோக்க எங்களுக்கு நேரமில்லை என்பதை அறிய தருகின்றோம் .
ReplyDelete