.

Pages

Tuesday, August 26, 2014

உடையநாடு பெண்கள் அரபிக் கல்லூரி கட்டுமானப் பணி தொடக்க விழா !

தஞ்சை மாவட்டம், பேராவூரணி, உடையநாடு என்ற ஊரில் பெண்கள் அரபிக் கல்லூரி. 'மதரஸா அஸீஸிய்யா' கட்டுமானப் பணி தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது.

மௌலானா சையது முகமது புகாரி பாஜிலே மன்பஈ(மலேசியா) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆலிம் அகமதுஷா, ஏர்வாடி இப்ராஹிம் ஜமாலி, காளிக்காவிளை இமாம் போன்றோர் சிறப்புரையாற்றினர். மேலும் சென்னை அஸ்ஸாதிக், சாகுல் ஹமீது, தலைமையாசிரியர் குலாம் கனி, உள்ளூர் மற்றும் சுற்றுப்புறத்திலுள்ள ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.

மதரஸாவிற்கு இடம் வழங்கியதுடன் கட்டிடத்தையும் தானே கட்டித்தருவதாக மலேசிய தொழிலதிபர் டத்தோ அப்துல் அஜீஸ் அவர்கள் மற்றும் அவர்களின் மகன்களான ரஜாலுத்தீன், ஷிஹாபுத்தீன் வாக்களித்து கட்டிடப் பணியினைத் துவக்கி வைத்தனர்.

தகவல் : பள்ளிவாசல் டுடே



No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.