.

Pages

Thursday, August 14, 2014

தகுதிப்பட்டை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா !

பேராவூரணியில் லியோஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் கிளப் மற்றும் தாய் புடோகான் கராத்தே பயிற்சி பள்ளியின் சார்பில் மாணவ, மாணவியருக்கு தகுதிப்பட்டை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா ஆவணம் சாலை லியோஸ் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
           
சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், கொச்சின் துறைமுக பொறுப்பு கழக டிரஸ்ட் உறுப்பினருமான எஸ்.வி.திருஞானசம்பந்தம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். வர்த்தக சங்க முன்னாள் தலைவர் மா.கோவிந்தராஜன்,பேரூராட்சி பெருந்தலைவர் என்.அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்.அதிமுக நகரச்செயலாளர் வி.என்.பக்கிரிசாமி, மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் உறுப்பினர் மல்லிகை வி.முத்துராமலிங்கம், அதிமுக மாவட்ட மாணவர் அணி இணைச்செயலாளர் ஆர்.ப்பி.ராஜேந்திரன் மாணவர்களுக்கு தகுதிப்பட்டையினையும், அரசு தலைமை மருத்துவர் டாக்டர் ஏ.காந்தி, வழக்கறிஞர் எஸ்.வி.சீனிவாசன் ஆகியோர் சான்றிதழையும், தொழிலதிபர் துரை.மனோகரன், சத்யா மோட்டார்ஸ் ஏ.சிவக்குமார் அடையாள அட்டையையும் மாணவர்களுக்கு வழங்கினர்.
               
கராத்தே அசோசியேஷன் மாநில நிர்வாகியும், தலைமை பயிற்சியாளரான குளித்தலை சென்சாய்.எஸ்.சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். ஆக்ஸ்போர்டு தங்கராஜன், ஆசிரியர் ஏ.மதிவாணன், மாமுண்டி, ட்டி.கே.சுப்பிரமணியன், ராஜசேகர், ஒன்றிய கவுன்சிலர் ஜெய்சங்கர், ஏ.மூர்த்தி, ஆர்.கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.கராத்தே பயிற்சி பள்ளி நிறுவனர் மற்றும் தலைவர் சென்சாய் கே.பாண்டியன் நன்றி கூறினார்.
         
முன்னதாக கராத்தே பயிற்சி பள்ளி மாணவர்கள் தாங்கள் பெற்ற பயிற்சிகளை பார்வையாளர்கள் முன்பு செய்து காட்டினர்.நிகழ்ச்சியின் நிறைவாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

செய்தி : எஸ்.ஜகுபர்அலி,
பேராவூரணி.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.