.

Pages

Tuesday, August 26, 2014

அதிரை குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி கல்லணை உட்கோட்ட அலுவலருடன் அதிரை அப்துல் அஜீஸ் சந்திப்பு !

வறண்டு கிடக்கும் அதிரை குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி அதிமுக கட்சியின் மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை அப்துல் அஜீஸ் அவர்கள் கல்லணை கால்வாய் உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் A. முஹம்மது இக்பால் அவர்களை பட்டுக்கோட்டை அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட கல்லணை கால்வாய் உட்கோட்ட அலுவலர் விரைவில் அதிரை பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை மேற்கொள்வதாக அதிரை அப்துல் அஜீஸிடம் உறுதியளித்தாக கூறப்படுகிறது.

கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :
  



செய்தி மற்றும் படங்கள் : நூர் முஹம்மது ( நூவன்னா )  

5 comments:

  1. இது மாதிரி களத்தில் இறங்கி வேலை செய்யும் ஆளுதான் நம்ம ஊருக்கு ‎வேணும், கல்லணை கால்வாய் கோட்ட அலுவலகத்தில் எப்படி கலக்கினார் ‎பாருங்க. இப்போ எல்லாத் தண்ணீயும் கலங்கிக் கொண்டு நம்ம குளத்துக்கு ‎வரப்போகுது.‎

    ReplyDelete
  2. .நன்றி, வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. சென்ற முறை தண்ணீரை தடுத்து பெயர் எடுத்தீர்கள் அதை துடைக்கும் விதமாக இந்த முறை செயல்படுங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அஜீஸுக்கு சாலவை போடுபவர் எந்த ஊரை சார்ந்தவர் அவர் அதிரையை சார்ந்தவராக இருந்தால் எதற்காக சால்வை போடுகிறார் என்ற செய்தியை தெரிவியுங்கள். பட்டுக்கோட்டைக்கு சென்று சால்வை போடுவது காமடியாக தெரிகிறது. அதிரையில் அதிமுக வளரும்?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.