.

Pages

Sunday, August 24, 2014

ஏஸி - பிரிட்ஜ் பழுதுபார்க்கும் இலவச பயிற்சி ! நேர்முக தேர்வில் பங்கேற்க அழைப்பு !!

குளிர்சாதன பெட்டி பழுதுபார்க்கும் பயிற்சிக்கு தகுதியானோர் வரும், 25ம் தேதி நடக்கும் நேர்முக தேர்வில் பங்கேற்கலாம் என, ஐ.ஓ.பி., வாங்கியின் கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம் இயக்குனர் வெற்றிச்செல்வன் தெரவித்தார்.

அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
தஞ்சை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில், நபார்டு நிதியுதவியுடன் இலவச ஏ.சி.,ரெப்ரிஜிரேட்டர் பராமரித்தல் மற்றும் பழுதுபார்த்தல் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில், வரும் 25ம் தேதி முதல், 30 நாட்களுக்கு தினமும் காலை, 9.30 முதல் மாலை, 5 மணி வரை நடக்கும் பயிற்சியில் பங்கேற்று தகுதி பெறும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.பயிற்சியின்போது, மதிய உணவு மற்றும் தேவையான பயிற்சி பொருட்கள் பயிற்சி மையத்திலிருந்து வழங்கப்படும். பயிற்சிக்கு எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை. திறமையான தொழில்நுட்ப வல்லுனர்களை கொண்டு, சிறப்பாக பயிற்சி அளிக்கப்படும்.

அரசு மானியத்துடன் தொழில் துவங்குவதற்கு ஆலோசனை வழங்கப்படும். வரும், 25ம் தேதி காலை நேர்முக தேர்வுக்கு கல்வி சான்று, மாற்றுச்சான்று, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, 3 ஸ்டாம் சைஸ் போட்டோ கொண் டுவர வேண்டும். அரசு திட்டத்தில் மானியத்துடன் வங்கி கடன் பெற்று, சுய தொழில் துவங்குவதற்கும் தேவையான வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு, 
ஐ.ஓ.பி., கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம்,
எண்.4, பக்கிரிசாமி வீதி,
ரெட்டிபாளையம் ரோடு, ஈஸ்வரி நகர்,
மருத்துவக்கல்லூரி சாலை,
தஞ்சை - 613004

என்ற முகவரியில் அல்லது, 04362-242377 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.