இந்த மாதம் 27 ஆம் தேதி இந்தியாவிலிருந்து முதல் ஹஜ் விமானம் ஜித்தா வரவுள்ள நிலையில், இவ்வருடம் ஹஜ் ஏற்பாடுகள் மற்றும் ஹாஜிகளுக்கு செய்ய வேண்டிய பணிகள் திட்டங்கள் தற்போதே தொடங்கிவிட்டன.
இந்த நிலையில், ஹஜ்ஜுக்கு வரும் ஹாஜிகள் தங்கள் ஹஜ்ஜை முடித்து நாடு திரும்பும்போது ஜித்தா விமான நிலையம் வரை எந்த சுமைகளையும் சுமக்க வேண்டியதில்லை என்று இந்தியன் ஹஜ் கமிட்டி தெரிவித்துள்ளது. மேலும் அவர்களின் உடமைகளை ( லக்கேஜ் மற்றும் ஜம் - ஜம் தண்ணீர் ) உரிய ஏர்லைன்ஸ் ஏற்பாட்டின் மூலம் அதற்கென நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்கள், ஜித்தா விமான நிலையத்தில் கொண்டு சேர்ப்பார்கள் என்றும் இதனால் ஹாஜிகள் வீண் சிரமம் தவிர்க்கப் படும் என்றும் இந்தியன் ஹஜ் கமிட்டி தெரிவித்துள்ளது.
ஏற்கனவே Saudi Arabian Ailines விமான நிறுவனம் இந்த ஏற்பாட்டை செய்து வருகின்ற வேளையில் Air India விமானம் மூலம் வரும் ஹாஜிகளுக்கும் இதே நடைமுறை பின்பற்றப்படும் என்று இந்திய துணைத்தூதர் முபாரக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஹாஜிகளைப் பொருத்தவரை அவர்கள் நாடு திரும்பும்போது மிக முக்கியமாகக் கொண்டு செல்லும் பொருள் ஜம் ஜம் தண்ணீர். ஹஜ்ஜை முடித்து நாடு திரும்பும் ஹாஜிகள் இதனை தம் உற்றார் உறவினருக்கு வழங்கி மகிழ்வர். எனவே ஜம் ஜம் தண்ணீர் ஹாஜிகளுக்கு சிரமமின்றி கொண்டு செல்லும் விதமாக அவர்களுக்கு சுலபமானமுறையில் விமான நிலையத்தை அடைய வழி செய்யப்படும் என்று தெரிவித்தார். ஹஜ் கமிட்டி அல்லாது தனியா ஹஜ் நிறுவனங்களும் இதனைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.