.

Pages

Saturday, August 23, 2014

பட்டுக்கோட்டைக்கு வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து மீது மணல் லாரி மோதி விபத்து ! பயணிகள் படுகாயம் !!

தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு 35 பயணிகளுடன் தனியார் பஸ் ஒன்று இன்று காலை புறப்பட்டு சென்றது. பஸ் பட்டுக்கோட்டை பைபாஸ் சாலை கீழவஸ்தாசாவடி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே மணல் ஏற்றி கொண்டு குறுக்கு வழியில் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அதைகண்ட பஸ் டிரைவர் எதிரே வரும் லாரியில் மோதிவிடக்கூடாது என்பதற்காக பஸ்சை ஓரமாக திருப்பியபோது எதிரே வந்த லாரி, பஸ்சின் முன்பகுதியில் மோதியது.

இதனால் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த தடுப்பு கட்டையை உடைத்து கொண்டு பள்ளத்தில் இறங்கியது. இதில் பஸ்சின் முன்பகுதியில் பயணம் செய்த 8 பெண்களும் ஒரு ஆணும் படுகாயம் அடைந்தனர். அதைனைகண்ட அந்தவழியாக வாகனத்தில் சென்றவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்து விபத்தில் சிக்கி உள்ளவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் தஞ்சை டவுன் டி.எஸ்.பி. கண்ணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளம்பரிதி மற்றும் தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்சில் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பஸ்சில் சிக்கியிருந்த 20க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்டனர்.

பின்னர் தஞ்சை தீயணைப்புபடை வீரர்கள் உதவியுடன் விபத்தில் சிக்கிய பஸ் மற்றும் லாரியை மீட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதுகுறித்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு செல்லும் பைபாஸ் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தஞ்சையில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி : மாலை மலர்
படங்கள் : யூசூப் 








1 comment:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    பொழுது விடிந்த உடனே இப்படியா.‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.‎
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.‎
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.