.

Pages

Sunday, August 24, 2014

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தடகள போட்டிகளில் மாவட்டளவில் முதல் இடம் பெற்று சாதனை ! தலைமையாசிரியருடன் சந்திப்பு !! [ காணொளி ]

பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட உடற்திறன் கழக பட்டுக்கோட்டை குறுவட்ட தடகள போட்டிகள் கடந்த 21-08-2014, 22-08-2014 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெற்றது.

பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அதிரை, பட்டுக்கோட்டை, கரம்பயம், மதுக்கூர், பேராவூரணி, ஆலத்தூர், அலிவலம், தாமரங்கோட்டை, துவரங்குறிச்சி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளில் இருந்தும் மாணவ மாணவிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.

14 வயதிற்குட்பட்டவர்கள், 17 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் 19 வயதிற்குட்பட்டவர்கள் என 3 பிரிவாக பிரித்து போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் 630 மாணவர்களும், 514 மாணவிகளும் கலந்து கொண்டனர்.

இதில் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். மேன் மேலோர் பிரிவில் கலந்து கொண்ட பள்ளியின் 12 ம் வகுப்பு மாணவன் M. முஹம்மது ஆஷிப் 10 புள்ளிகள் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டத்தை பெற்றார். அதே போல் கிலோர் பிரிவில் 10 ம் வகுப்பு மாணவன் P. முத்துராசு கலந்து கொண்டு 16 புள்ளிகள் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டத்தை பெற்றார். மொத்தம் 59 புள்ளிகள் பெற்று பள்ளி முதலிடம் பெற்று பட்டுக்கோட்டை கல்வி மாவட்டளவில் சாதனை நிகழ்த்தியுள்ளது. மேலும் கீலோர் பிரிவில் முஷாரப், மேலோர் பிரிவில் பயாஸ் அஹ்மது, முஹம்மது அர்சாத், முஹம்மது ராசித் அலி, சேக் முஹம்மது, மேன்மேலோர் பிரிவில் அப்துல் பாசித், சாதுலி, முஹம்மது ஆசிப், காளிதாஸ் ஆகியோர் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்ந்து தந்துள்ளனர்.        .

போட்டிகளில் கலந்து கொண்டு சாம்பியன் பட்டங்களை வென்ற பள்ளி மாணவர்களுக்கும், பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகம் - தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியர் ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

பள்ளியின் தலைமையாசிரியர் A. மஹபூப் அலி அவர்களை அருமையான மாலை பொழுதில் அதிரை நியூஸ் சார்பில் சந்தித்து வாழ்த்துகளையும் - பாராட்டுகளையும் அன்புடன் தெரிவித்துக்கொண்டு விளையாட்டு போட்டிகளில் பள்ளி சாதனை நிகழ்த்தியது குறித்து கேட்டறிந்தோம்.

5 comments:

  1. வெற்றி பெற்ற மாணவர்களை பற்றி கொஞ்சம் விபரமாக கூறினால் வாழ்த்துக்கள் அவர்கள் சார்ந்த தெருவுக்கும் அவர்கள் பெற்றோருக்கு போய் சேர ஒரு வாய்ப்பாக அமையும்.

    Fazee Canada

    ReplyDelete
  2. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.