மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கல்லணையை வந்தடைந்தது. கல்லணையிலிருந்து டெல்டா சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து கடைமடை பகுதிகளில் தண்ணீர் தவழ்ந்து வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் வறண்டு கிடக்கும் அதிரையின் அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் திறந்துவிடக்கோரி மாவட்ட பொதுப்பணித்துறை அலுவலர்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அதிரை பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதில் முக்கிய நீர் ஆதாரப் பகுதியாக இருந்து வரும் காட்டுகுளத்திற்கு சிஎம்பி வாய்க்கால் வழியாக இன்று அதிகாலை முதல் ஆற்று நீர் வந்தடைந்தது. தவழ்ந்து வரும் தண்ணீரை கண்ட இப்பகுதியினர் மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.
முன்னதாக அதிரை பேரூராட்சி ஊழியர்களை கொண்டு வாய்க்காலில் உள்ள அடைப்புகள் மற்றும் குளக்கரையில் மண்டிக்காணப்பட்ட முட்புதர்கள் அகற்றப்பட்டன. இந்த பணிகளுக்காக ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. மேலும் குமிந்து காணப்படும் முட்புதர்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இந்த பணிகளை அதிரை இளைஞர்கள் தானாக முன்வந்து ஆர்வத்துடன் செய்கின்றனர்.
இதுகுறித்து 'சமூக ஆர்வலர்' ஜபருல்லா நம்மிடம் கூறியதாவது....
'கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு சிஎம்பி வாய்க்கால் வழியாக காட்டுகுளத்திற்கு நேரடியாக தண்ணீர் வருவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதே வேகத்துடன் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு நீர் வந்தால் குளம் முழுமையடைந்துவிடும். மேலும் அதிரையில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடும் நீங்கும். நிலத்தடி நீர் மட்டமும் உயரும். காட்டுக்குளம் நிரம்பியவுடன் அடுத்தடுத்த அதிரையின் அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் கொண்டு செல்லப்பட வேண்டும். தண்ணீர் தவழ்ந்து வரும் வாய்க்காலின் பாதையின் எந்த பகுதியிலும் உடைப்பு ஏற்படாதவாறு அதிரை இளைஞர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
இந்த பணிகளுக்காக இரவு பகலாக உழைத்த அனைத்து தலைவர்களுக்கும், கட்சி பிரமுகர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், மஹல்லா சங்க நிர்வாகிகளுக்கும், அதிரை இளைஞர்களுக்கும் நன்றியை கூறிக்கொள்கிறேன் இதே போல் அனைத்து தரப்பினரும் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுகிறேன்' என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.