.

Pages

Thursday, August 14, 2014

சமூக சேவைகள் விளம்பரத்திற்கா !?

முன்பெல்லாம் நமது முன்னோர்கள் பல்வேறு சேவைகளை செய்து மறைந்துள்ளனர். அவைகளில் எத்தனையோ இன்னும் நமக்குக் காட்டப்படவில்லை, அல்லது மறக்கப் பட்டு விட்டன. ஆனால் அவர்களுக்கு நன்மைகள் சென்றுகொண்டு இருக்கின்றன.

ஆனால் அவைகளில் இன்றளவில் பெரிய உதாரணமாக திகழ்வது பல கல்விக்கூடங்களும், பள்ளிவாசல்களும். இன்னும் பல வரலாறுகளைத் தோண்டினால் பல்வேறு துறைகளில் தன்னலம் பாராது சேவை செய்து நம்மை விட்டு மறைந்துவிட்ட  நமது முன்னோர்களைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.

ஆனால் இன்றோ அப்படியல்ல சிறு விஷயங்கள் கூட இணையத்திலோ அல்லது ஊடகங்களிலோ, வெளியாகி பலரைச் சென்றடைந்துவிடுகிறது. இது இப்படியிருக்க. சமூக சேவைகள் குறித்து எனக்கு தோன்றியதை தங்கள் முன் பகிர்ந்துகொள்கிறேன். இது யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல. என் மனதில் தோன்றியதை எழுதியுள்ளேன்,

சமூக சேவகர்களை நான்கு விதமாகப் பார்க்கிறேன்.

சமூக சேவகர்களின் முதல்வகை:
உதவி கோரி யாரேனும் இவரை தொடர்பு கொண்டால், ஒரு படை வீரனைப் போல் செயல்பட்டு உடனே களத்தில் குதிப்பதோடு, எந்த வித எதிர் பார்ப்புமின்றி, நேரிடையாகவோ அல்லது தொடர்பு கொள்ள வேண்டியவர்களைத் தொடர்பு கொண்டோ உரியவருக்கு உதவி புரிந்து அல்லாஹ்வுக்காக மட்டும் செயலை செய்து அதில் வெற்றி காண்பது. அவர்கள் விளம்பரங்களை எதிர் பார்ப்பதில்லை, அல்லது விளம்பரப்படுத்துவதில்லை.

சமூக சேவகர்களின் இரண்டாம் வகை:
இவர்கள்களின் சேவையில் குறைபாடு இருக்காது. ஆனால் இவர் களத்தில் செயல்படும் ஒவ்வொரு சூழலையும், படம்பிடித்து, அல்லது வீடியோ எடுத்து ஊடகங்களுக்கு அனுப்புவதைத்தான் முதல் வேலையாகச் செய்வார்கள். இதில் இவர்களுக்கு இரண்டு நோக்கங்கள் உள்ளன. 1)  செய்தியை தெரியப்படுத்துவது, 2) இச்சேவையை நான்தான் செய்தேன் என்று தன்னுடைய புகைப்படம், அல்லது மற்றும் பெயரை வெளியிட்டு புகழ் தேடுவது.

சமூக சேவகர்களின் மூன்றாம் வகை:
இவர்களின் நிலை பலருக்கு ஏற்பட்டதுண்டு, அதாவது இவருக்கு ஒரு சம்பவம் குறித்து தகவல் கிடைத்து உதவி கோரும்போது, உடன் களத்தில் இறங்கி உரியவருக்கு உதவி செய்து, 'தன் பணி செய்து கிடப்பதே' இவரின் நோக்கமே தவிர இதனை நான்தான் செய்தேன் என்று பெருமை அடிப்பதிலோ, அல்லது விளம்பரப்படுத்துவதிலோ எந்த நோக்கமும் இருக்கப் போவதில்லை. ஆனால் அதே சூழலில் இதே உதவியை இன்னொருவர் முயற்சி செய்து அவர் வழியில் பல உதவிகள்,சேவைகள் புரியும்போது, அதனை ஊடகங்களில் செய்தியாக வெளியாக்கி குறிப்பிட்ட ஒரு சாரார், மட்டும் பெயரைத் தட்டிச் செல்லும்போது, அவ்வாறான சூழலில் முதலில் தன்னலம் பாராது களத்தில் இறங்கியவர் மனதளவில் பெரிதும் பாதிக்கப் படுகிறார். அதாவது தனது சேவைகள் மறைக்கப் பட்டு ஒரு சாரார் மட்டும் புகழப் படுகின்றனரே! என்ற ஆதங்கத்தோடு, புகழ் தேடுபவரைச் சாடி ஊடகங்கள் வாயிலாக தகவல் வெளியிடுவதோடு, உண்மையில் முதலில் களமிறங்கியவர் யார் ? என்பதை வெளியிட விரும்புகிறார். இவ்வாறு தகவல் வெளியிடும்போது, இவரின் செயலும், அவர் அறியாவண்ணம் விளம்பரமாக்கப்படுகின்றது.

சமூக சேவகர்களின் நான்காம் வகை:
இவர்களுக்குத்தான் நண்மை அதிகம், அதாவது, பாதிக்கப்பட்டவரை பாதிப்பிலிருந்து விடுவிக்க உடன் களத்தில் இறங்கி அவசர கால நடவடிக்கைகளில் அணுக வேண்டியவர்களை அணுகி, பல சிரமங்களுக்கு மத்தியில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேவை செய்து பாதிக்கப்பட்டவரை பாதிப்பிலிருந்து விடுவிப்பதோடு அதே நேரத்தில் தன்னுடைய செயல் அல்லது சேவை புகழுக்காக அல்லாமல் இருப்பதில் மிகவும் கவனம் செலுத்துவார். மேலும் அவரின் செயல் புகைப்படமாகவோ, வீடியோவாகவோ வெளியாகமல்( விளம்பரமாகாமல் ) பார்த்துக் கொள்வார். இவரின் செயல் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி நண்மையை மட்டும் அடைய வேண்டும் என்பதே இவரின் நோக்கமாக இருக்கும்.

(ஒவ்வொரு முஸ்லீமுக்கும் சமூகப் பொறுப்பு உண்டு, அவர்கள் மறுமையில் இதன் விசயமாக விசாரிக்கப்படுவார்கள்)

எல்லாம் வல்ல அல்லாஹ் குர்ஆனில் கூறியிருப்பதுபோல, ஒருவருக்கு செய்யும் உதவிகள், மறைமுகமாகவும், ரகசியமாகவும் செய்வதே சிறந்த சேவையாக சொல்கிறான்.

நபி(ஸல்) அவர்கள் கூறியதுபோல, "செயல்கள் அனைத்தும் எண்ணத்தின் அடிப்படையாகக் கொண்டே அமைகிறது"

என்வே நாம் நம் சேவைகளும், செயல்களும், எதன் அடிப்படையில் அமைந்துள்ளது என்று சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம்.

எனினும், மேற்சொன்ன சேவகர்களில் அவர்களின் செயல்பாடுகளிலும், குண நலன்களிலும், வேறுபட்டாலும், சிறு குறைகளும் இருந்தாலும், அவர்களிடம் உள்ள் ஒரே ஒற்றுமை, இவர்கள் அனைவரும், ஒரு குறிப்பிட்ட சேவைக்காக, தனது பொருள், நேரம், உடல் உழைப்பு அனைத்தையும் செலவு செய்வதோடு, பல இன்னல்களுக்கு மத்தியில், அவர்கள் எடுத்துக் கொண்ட பணியை இறுதிவரை முன்னின்று செயல்படுத்தி வெற்றி காண்பதை அறிய முடிகின்றது.

எந்த ஒரு சேவைக்கும் தன்னை ஈடுபடுத்தாமல் இருக்கும் பல சுயநலவாதிகளுக்கு மத்தியில் இவர்கள் செய்யும் செயல்பாடுகளில் குறை காண்பதை விடுத்து, அவர்களின் சேவைகளை பாராட்டுவதைத் தவிர வேறில்லை.

இவர்களுக்காக வல்ல இறைவனிடம் இரு உலகிலும் இவர்களுக்கு நன்மைகளை தர பிரார்த்திப்போம்

M.F. அஹமது அஸ்லம்
( ஜித்தா துறைமுகம் )

8 comments:

  1. ARE YOU WHICH PART 1...2.... 3..... 4....

    ReplyDelete
  2. சகோ .அஸ்ஸலாம் ..அவர்களுக்கு ...அருமையான ஆக்கம் .
    விளம்பரங்களுடன் கூடிய சமூக சேவைகள் ஒரு தனிமனிதனுக்கு மக்களால் பிரதி நித்துவம் கொடுக்கப்பட்டு அவன் ஆளுமை என்ற பதவியை பெற மேலும் அவன் பல நல்ல காரியங்களை செய்ய அது வழிவகைசெய்யும் அதன்றி தர்மம் அது உதவி பெறுபவர் அனுமதியுடன் விளம்பரபடுத்தப்படும்போது நாமும் இதேபோல் செய்யலாமே என்று அது மற்றவர்களையும் தூண்டிவிடும்.

    பல அமைப்புகளை கொண்ட நாம் விளம்பரம் தேடுவதில் தவறு ஏதுமில்லை.விளம்பரங்களே தர்மங்களை ஊககுவிக்கின்றன இதுவே காலத்தின் கட்டாயம் .

    ReplyDelete
  3. Replies
    1. really supper ur msg and everyone following in lifestyle better
      Best Regards
      B.Ahamed Anas

      Delete
  4. நல்லது யோசனைக்கு நன்றி! சில விசயங்களுக்கு விளம்பரம். நிர்பந்தம்மாகி விட்டுத் இது காலத்தின் கட்டாயம்.

    ReplyDelete
  5. பல கல்விக்கூடங்களும், பள்ளிவாசல்களும். இன்னும் பல வரலாறுகளைத் தோண்டினால் பல்வேறு துறைகளில் தன்னலம் பாராது சேவை செய்து நம்மை விட்டு மறைந்துவிட்ட நமது முன்னோர்களைப் பற்றி அறிந்துகொள்ளலாம். அன்றைய காலத்தில் இதோபோல தொடர்பு வசதிகள் இல்லை என்றால்லும் கூட டீ கடை மற்றும் தெருக்களில் மக்கள் பேசிகொள்வார்கள் என கேள்வி பட்டதுன்டு, இன்றைய சூழ்நிலை பக்கத்து வீட்டாரிடம் முகம் கொடுத்து பேசுவது பெரும்பாலும் இல்லை எனவே சில விசயங்களுக்கு விளம்பரம். நிர்பந்தம்மாகி விட்டது இது காலத்தின் கட்டாயம்.

    அன்புடன.
    மான்.A.ஷேக்
    Human Rights.
    Thanjavur District. Adirampattinam-614701.

    ReplyDelete
  6. பதிவுக்கு நன்றி.‎

    விளம்பரங்கள் என்பது உலகம் தோன்றிய காலந்தொட்டே இருந்து ‎வருகின்றது, அது ஒருவரை ஒருவர் சென்றடைய பல நாட்கள் எடுத்தது, ‎பல பேர்களுக்கு சென்றடையாமல் இருந்தது.‎

    இன்று அப்படி இல்லை, இன்றைய நாட்களில் வசதிகள், நவீனங்கள், ‎துரிதங்கள் வரவே நொடிப்பொழுதில் அசுர வேகத்தில் எல்லோரையும் ‎சென்றடையும்படி நவீனம் தலை தூக்கி இருக்கிறது.‎

    நமதூரை பொருத்தமட்டில் எல்லா சங்கதிகளும் விளம்பர வடிவில் ‎வந்துகொண்டு இருக்கின்றது.‎

    ஒன்று மட்டும் வரவில்லை. அதாவது, இந்த! இந்த!! இடங்களில் ‎திருமணத்திற்கு தகுதியான ஆணும் இருக்கின்றனர், பெண்ணும் ‎இருக்கின்றனர் என்ற விபரங்கள் அடங்கிய விளபரங்கள் இன்னும் வர ‎வில்லை. அப்படி வந்தாலும் ஆச்சரியப்படத் தேவை இல்லை.‎

    ஆகவே, இக்காலக் கட்டத்தில் விளம்பரம் ஒரு உறுதுணையாக ‎இருக்கின்றது.‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.‎
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.‎
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.