.

Pages

Monday, August 18, 2014

திடீர் புழுதிப் புயல் ! அமீரகவாசிகள் மகிழ்ச்சி !? [ படங்கள் இணைப்பு ]

தமிழகத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி என்று அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒரே மாதிரி செய்தி வாசிப்பார்கள் அல்லவா, அதே தோரணையில் நமது தலைப்பையும் படித்துவிட்டு உள்ளே வருக!
நேற்று காலையிலிருந்து என்றுமில்லாத வகையில் வெயில் சுட்டெரித்து சோதனைக்குள்ளாக்கிய வேளையில், மாலையில் அமீரகத்தின் பல பகுதிகளிலும் திடீர் புழுதிப் புயல் அடித்து ஊரெல்லாம் ஒரே குப்பைமயமானது அதிலும் பாலைவனமும் நகரும் அற்ற ரெண்டும்கெட்டான் பகுதியில் வாழ்வோர் வாரியிறைக்கப்பட்ட பொடி மணலால் ( அழுக்கு நிறைந்த தூசியால்) மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர் என்றாலும் அமீரகவாசிகளிடம் ஒரு மகிழ்ச்சி கோடிட்டது ஏன் ?

கடந்த சுமார் நான்கு மாதங்களாக கடும் வெயிலால் தகித்த அமீரகத்தின் தட்பவெப்பத்தில் மாற்றம் வரப்போகிறது என்ற முன்னறிப்பே இந்த கடும் மணற்காற்று, செப்டம்பர் 15ந் தேதிக்கு மேல் கடும் வெப்பம், வெக்கையற்ற ஒரு சமநிலை சீதோஷ்ண நிலைக்கும் அதனை தொடர்ந்து குளிர் காலத்திற்கும் திரும்பவுள்ள அமீரகம் மீண்டும் இதுபோல் ஒரு காற்றை மிக சமீபத்தில் சந்திக்கும் வாய்ப்பும் உள்ளது.

நேற்றைய புழுதிப்புயலுக்குப்பின் அமீரகத்தின் ஒரு சில இடங்களில் தூரல் மழை விழுந்துள்ளன, இதன் மூலம் புயலால் ஏற்பட்ட புழுதி மண்டலம் அடங்கியுள்ளது.

நாம் வெளிநாட்டு வாழ்க்கையில் சந்திக்கும் பல்வேறு கஷ்டங்களில் ஒன்றான அமீரகத்தின் புழுதிப்புயலை பற்றி இவ்வாறு விவரித்து எழுத வேண்டிய அவசியமென்ன?

அறிந்தும் அறியாமலும் நாம் எத்தனையோ தவறு செய்கிறோம் அதிலொன்று நமது பிள்ளைகளின் மீது கொண்டுள்ள அளவுகடந்த பிரியம், தேவையான அனுபவமில்லாத நிலையில், நம்மில் பலர் நமது பிள்ளைகளுக்கு பைக் வாங்கிக் கொடுக்க, அவர்களும் கண் மண் தெரியாமல் பறந்து சென்று அடிக்கடி விபத்துக்குள்ளாவது அதிரையின் அன்றாட செய்தியாக வருவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே.

இளமையை வெளிநாடுகளில் தொலைத்த நமக்காவது இறைவனின் கிருபையால் கை, கால்கள் நல்ல முறையில் இருக்கிறது பொருளாதாரத்தை திரட்டிக் கொள்ளதொரு வாய்ப்பாக ஆனால் நமது பொறுப்பற்ற தனத்தால் நமது பிள்ளைகள் விபத்தால் கை, கால்களை இழக்க நேரிட்டால்...? எனவே, இதுபோன்ற பல்வேறு கஷ்டங்களுக்கிடையே திரட்டும் பொருளாதாரம் நமது குடும்பத்திற்கு குழி பறிக்கும் ஒன்றாக அமைந்து விடக்கூடாது.

இன்னும் எத்தனை காலத்திற்கு தான் எம்பெண்களின் வீண் ஆடம்பரத்தையே திட்டுவது?

( எதை கொண்டு வந்து எதில் முடிச்சுப் போடுகிறேன் என திட்டாதீர்கள், புழுதிப் புயலை ஒரு செய்தியாக தர வேண்டும் என நினைத்த பொழுது இதையும் சேர்த்து பயனுள்ள செய்தியாக தரலாமே என்று என் மனம் நாடியது ).

அதிரை அமீன்
Image Credit : Gulf News







No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.