.

Pages

Thursday, August 21, 2014

AJ பள்ளியில் நாளை துவங்க உள்ள ஜும்மா தொழுகைக்காக பணிகள் தீவிரம் !

அதிரை AJ நகரில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக இயங்கி வருகின்ற A.J. பள்ளிவாசல் அப்பகுதியினரின் வேண்டுகோளுகிணங்கவும், அதிரை உலமா சபை மற்றும் அதிரை நகர ஜமாத்தினரின் ஒத்துழைப்புடனும் நாளை ( 22-08-2014 ) வெள்ளிக்கிழமை முதல் ஜும்மா தொழுகை துவங்க இருப்பதை கடந்த வாரங்களுக்கு முன்பு பள்ளியின் நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் நம்மிடம் அறிவிப்பு செய்தனர்.

இந்நிலையில் பள்ளியின் முதல் ஜும்மா தொழுகை சிறப்பாக நடத்தி முடித்திட கடந்த சில நாட்களாக அதற்குரிய பணிகளை பள்ளியின் நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். நாளை நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பல்வேறு மார்க்க அறிஞர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்த உள்ளனர். இதில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அன்புடன் அழைப்பு விடப்பட்டுள்ளது.

குறிப்பு : பள்ளி பராமரிப்பு மற்றும் வளர்ச்சிக்காக போதுமான நிதி உதவியை பள்ளி நிர்வாகிகள் நம்மிடம் எதிர்பார்த்துள்ளனர். ஆகவே உதவ எண்ணுவோர் பள்ளி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உதவ முயற்சிக்கலாம்.




3 comments:

  1. பிஸ்மில்லாஹ்ஹிற்றஹ்மான்னிற்றஹீம்


    يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ
    ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும். 62:9

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.