பட்டுக்கோட்டை அருகே வாலிபரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த மர்ம ஆசாமிகள் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
தொழிலாளி
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மேலக்கரம்பயம் சேனாதிபதி தெருவை சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவருடைய மகன் அகிலன்(வயது 30). கூலித்தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று இரவு சுமார் 10 மணிஅளவில் அகிலன் பட்டுக்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.
வெட்டிக்கொலை
மேலக்கரம்பயம் மாரியம்மன்கோவில் ஆர்ச் அருகே அகிலன் வந்தபோது அவருக்கு பின்னால் வந்த மர்ம ஆசாமிகள் அகிலனின் மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அகிலன் அங்கிருந்து தப்பி ஓடமுயன்றார்.
ஆனால் அந்த ஆசாமிகள் தாங்கள் வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அகிலனை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்து உயிருக்கு போராடிய அகிலன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதைத்தொடர்ந்து கொலையாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
விசாரணை
இது குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) ராஜா, பட்டுக்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கிருந்த தடயங்களை கைப்பற்றினர்.
கொலை செய்யப்பட்ட அகிலனின் உடல் பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வருகிறார்கள். இரவு நேரத்தில் வாலிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நன்றி : தினத்தந்தி

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.