.

Pages

Monday, August 25, 2014

பட்டுக்கோட்டையில் சர்க்கரை நோய் பரிசோதனை சிறப்பு முகாம்

பட்டுக்கோட்டையில் மும்பை சனோபை  டயாபடிக்ஸ் மற்றும் பட்டுக்கோட்டை மரியா சர்க்கரை நோய் மருத்துவ மையம் இணைந்து சர்க்கரை நோய் கண்டறியும் முகாமினை நடத்தினர்.

பட்டுக்கோட்டை மயில்பாளையம் மரியா மருத்துவ மையத்தில் நடைபெற்ற இம்முகாமினை நகர்மன்ற தலைவர் எஸ்.ஆர்.ஜவஹர் பாபு தலைமையேற்று துவக்கி  வைத்தார். மருத்துவர் எம்.எட்வின், மருந்தாளுநர்கள் சரவணன் தலைமையிலான குழுவினர், சந்தானமேரி, பொற்பாதம் ஆகியோர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.

முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சகுந்தலா, ராமச்சந்திரன், ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் மோகன்தாஸ், வழக்கறிஞர் சிதம்பரம், முருகு.துரைசாமி, நகர்மன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், ராதாகண்ணன், மோகன், அணைக்காடு ஊராட்சி மன்றத்தலைவர் சுதாகரன், சமூக ஆர்வலர் எம்.எம்.சுகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

முகாமில் இலவச சர்க்கரை நோய் கண்டறிதல், நரம்பு பாதிப்பு பரிசோதனை, மருத்துவ ஆலோசனைகளும்  மற்றும் ரூபாய் 30, 000 மதிப்பிலான மருந்துகளும் வழங்கப்பட்டது. சுமார் 200 க்கும் அதிகமானோர் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பரிசோதனை செய்துகொண்டனர்.முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் 'உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி' கையேடு வழங்கப்பட்டது.

செய்தி: எஸ்.ஜகுபர்அலி,
பேராவூரணி.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.