.

Pages

Saturday, August 30, 2014

மாணவர்களை அடிக்கவோ, திட்டவோ கூடாது ! ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அறிவுரை !

மாணவர்களை ஆசிரியர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் திட்டவோ, அடிக்கவோ கூடாது என்று மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.

பள்ளிக்கூடங்களுக்கு காலதாமதமாக வரும் மாணவர்கள், வீட்டுப்பாடத்தை எழுதிவராத மாணவர்கள், நன்றாக படிக்காத மாணவர்கள், வகுப்பில் பேசிக்கொண்டிருக்கும் மாணவர்கள் இப்படி ஏதாவது தவறு இழைக்கும் மாணவர்களை வெயிலில் மணிக்கணக்கில் நிற்கவைத்தல், பிரம்பால் அடித்தல், ஸ்கேல் கொண்டு தாக்குதல், குனிய வைத்து முதுகு மீது செங்கற்களை வைத்தல் இப்படி பல வகையான தண்டனைகளை ஆசிரியர்கள் கொடுத்து வந்தனர்.

அப்படிப்பட்ட நேரங்களில் சில மாணவர்கள் உயிரிழக்கக்கூடும். சில நேரங்களில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவது உண்டு. இப்படி எந்த துன்பமும் மாணவ-மாணவிகளுக்கு நேரக்கூடாது என்பதில் பள்ளிக்கல்வித்துறை அதிக அக்கறை கொண்டுள்ளது. இதற்காக மாணவர்களை கம்பு கொண்டு தண்டிக்கக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்தது.

அதன் காரணமாக மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கும் பிரச்னை பெரும்பாலும் ஓய்ந்துவிட்டது. இருப்பினும் சில பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பது நீடிக்கிறது.

சமீபத்தில் ஸ்கேல் கொண்டு ஆசிரியர் தாக்கியதில் ஒரு மாணவர் கண்பாதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் அனைத்து மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அதில், மாணவ-மாணவிகளை எந்த காரணம் கொண்டும் மன ரீதியாகவோ, உடல்ரீதியாகவோ பாதிக்கும்படி ஆசிரியர்கள் நடந்து கொள்ளக்கூடாது. அதாவது மாணவர்களை ஆசிரியர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் திட்டக்கூடாது. ஸ்கேல், கம்பு, கை உள்ளிட்ட எதைக்கொண்டும் அடிக்கக்கூடாது. அவ்வாறு மாணவர்களை ஆசிரியர்கள் அடித்ததாக உறுதி செய்யப்பட்டால் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கை அனைத்து மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

6 comments:

  1. மிக அருமையான பதிவு

    ReplyDelete
  2. கல்வி தரம் தாழ்ந்து விட்டது என்று பெற்றோர்கள் புலம்பிக்கொண்டிருக்கும் நேரத்தில் இனி மேலும் வெறுப்படைய செய்யும்.

    ஒரு சில இடத்தில் நடக்கும் தவறால் எல்லா இடத்தில் நடக்கும் என்று சொல்ல முடியாது. தற்போது 9 வகுப்பு வரை FAIL கிடையாது,

    இனி ஆசிரியர்கள் தங்கள் பெயரை ப்ரெசென்ட் கொடுத்துவிட்டு FB , BB ல் chat செய்துக்கொண்டு இருப்பார்கள்.

    இனி ஆசிரியர்களுக்கு வேலை குறைந்தது என்று சொல்லலாம்,

    அடிவாங்கி திருந்தியவர்கள் தான் அதிகப்பேர் இனி கூமுட்டையாக இருக்க நல்ல முடிவு என்று சொல்லலாமா ?

    ReplyDelete
  3. ஆசிரியர்களின் கண்டிப்பை குறைத்துவிட்டால் மாணவர்களின் ஒழுக்கத்தில் பாதிப்பு ஏற்படும். இந்த அறிவிப்பை தமிழக அரசு மறுபரிசிலனை செய்யவும்.

    ReplyDelete
  4. Good decision thanks to tamil nadu education department.
    Now all parent aware.
    Watch your kids and worry.
    Stop watching serial ...check home work what kids doing keep following them.... Once again thanks AMMA Government

    ReplyDelete
  5. Another thing find out what going on tutorials. .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.