.

Pages

Wednesday, August 27, 2014

இடதுசாரிகள் நடத்திய மக்கள் சந்திப்பு முகாம்!


உள்நாட்டு, வெளிநாட்டு பெருமுதலாளிகளுக்கு பொதுத்துறை விற்பனை, விலைவாசி உயர்வு, ஊழல் முறைகேடு உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து ஆகஸ்ட்- 25 முதல் 31 மாபெரும் மக்கள் சந்திப்பு இயக்கம் ஒன்றினை மாநிலம் முழுவதும் நடத்தி வருகிறது.    
 
அதன் ஒரு பகுதியாக பட்டுக்கோட்டையில் சிபிஎம் ஒன்றியச்செயலாளர் எம்.செல்வம், சிபிஐ மாவட்ட குழு உறுப்பினர் ஏ.கலியபெருமாள் தலைமையில் சிபிஎம் நிர்வாகிகள் கு.பெஞ்சமின் ,கே.மாரிமுத்து, விஜயகுமார், ஜீவானந்தம், சொக்கலிங்கம், உலகநாதன், சிபிஐ நிர்வாகிகள் அருளானந்தம், சந்திரன், துரைமாணிக்கம், வாசுதேவன் ஆகியோர் ஆகியோர் எட்டுபுளிக்காடு, வீரக்குறிச்சி,சஞ்சாய நகர், ஆலடிக்குமுனை, ஏனாதி, வேப்பங்காடு ஆகிய பகுதிகளில் ஒரு குழுவாகவும்,

சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.அய்யாவு, சிபிஐ மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சி.பக்கிரிசாமி, சிபிஐ ஒன்றியச்செயலாளர் ஏ.எம்.மார்க்ஸ் தலைமையில், சிபிஎம் நிர்வாகிகள் கே.பாலசுப்பிரமணியம், ஏ.சாமிநாதன், ஏ.மதி, ஆர்.மூக்கையன், ஆர்.எஸ்.வீரப்பன், என்.ஆறுமுகம், ஆனந்தராஜ், அருள், பன்னீர்செல்வம், அன்பழகன், சிபிஐ நிர்வாகிகள் பால்சாமி, சந்திரசேகர், ரெங்கசாமி, அசோகன் ஆகியோர் மற்றொரு குழுவாக நம்பிவயல், அதம்பை, நடுவிக்கோட்டை, அலிவலம், உதயசூரியபுரம், கழுகுபுலிக்காடு,உதயசூரியபுரம் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான கட்சி ஊழியர்கள் வீடுவீடாக சென்று மக்களை சந்தித்து மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டிக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

பின்னர் கரம்பயம் பகுதியில் நடந்த தெருமுனை பிரச்சார கூட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு, உதயசூரியபுரம் பகுதியில் நடந்த தெருமுனை பிரச்சார கூட்டத்தில் சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.அய்யாவு ஆகியோர் உரையாற்றினர்.

மேலும் திருவோணம் ஒன்றியத்தில் சிபிஎம் ஒன்றியச்செயலாளர் கே.ராமசாமி, சிபிஐ ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் துரை பிச்சையப்பா தலைமையில் பதினாறு பேரும், சிபிஐ ஒன்றிய செயலாளர் கே.எம்.ராமசாமி, சிபிஎம் விதொச ஒன்றியத்தலைவர் ஆர்.வாசு ஆகியோர் தலைமையில் பதினாறு பேர் அடங்கிய மற்றொரு குழுவினரும் ஊரணிபுரம், வெட்டிக்காடு,கிளாமங்களம், ஊரணிபுரம், திருவோணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

செய்தி: எஸ்.ஜகுபர்அலி,
பேராவூரணி.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.