.

Pages

Monday, August 25, 2014

அதிரையில் மத்திய அதிரடிப்படையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சி !

அதிரையில் இன்று பிற்பகல் மத்திய அதிரடிப்படை போலிசாரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

வண்டிபேட்டையிலிருந்து புறப்பட்ட அணிவகுப்பு சேர்மன் வாடி வழியாக பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. இதில் மத்திய அதிரடிப்படை போலீசார் கலந்து கொண்டனர். மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையின் ஒரு அங்கமாகிய மத்திய அதிரடிப்படையினர் சட்டம் - ஒழுங்கு நிலை நாட்டுதல், சட்டவிரோதமாக கூடும் கூட்டத்தை கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தபடுவார்கள். இன்று பட்டுக்கோட்டை, மதுக்கூர் போன்ற பகுதிகளில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இன்னும் சில தினங்களில் இந்த பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் நடைபெற உள்ள நிலையில் இந்த அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image credit : Madukkur tmmk

4 comments:

  1. நல்லாதானே போய்ட்டு இருக்கு, ஏன் இந்த பீதி?
    எவனாவது கலவரம் பண்னப்போறாய்ங்கனு உளவுத்துறைக்கு சொன்னானா?

    ReplyDelete
  2. சும்மா கெடக்குற சங்க ஊதி கெடுக்காதியடா

    ReplyDelete
  3. இவங்கலே கலவரத்தை உண்டாக்கிடுவானுங்க போல

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.