.

Pages

Wednesday, August 20, 2014

சவூதியில் மீண்டும் கெடுபிடி !

சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்களை வெளியேற்றும் விதமாக கடந்த வருடம் சவூதி அரசு நிதாகத் என்ற தொழிலாளர் கொள்கையின் மூலம் அவரவர்களின் நிலையை சரி செய்துகொள்ளுமாறு வலியுறுத்தி, பலர் தமது நிலையை சரி செய்தனர்.
மேலும் சரி செய்ய இயலாதவர்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப் பட்டனர்.

இந்த நிலையில் கெடுக் காலம் முடிந்து சட்ட விரோதமாக தங்கியிருந்தவர்களை சவூதி தொழிலாளர் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், கைது செய்து நாடு கடத்தினர்.

கடந்த வருடமே கெடுக் காலம் முடிந்தது எனினும் இன்னும் சிலர் தமது நிலையை சரி செய்துகொள்ளாமல் இருப்பதாக அறிந்து, மீண்டும் சோதனை முறையை சவூதி அரசு முடுக்கி விட்டுள்ளது.

அதன்படி சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப் படுவார்கள். எனத்தெரிகிறது. மேலும் தாம் செய்யும் வேலை என்ன என்பதை  குடியுரிமை அட்டையில் குறிப்பிட்டு இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் குடியுரிமை அட்டையில் இல்லாத வேறொரு வேலை செய்தாலும் அவர்கள் கைது செய்யப்படலாம் அல்லது எச்சரிக்கை விடுத்து உடன் சரி செய்துகொள்ள கால அவகாசம் கொடுக்கப் படலாம் எனத் தெரிகிறது.

இதற்கிடையே அதிரையைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர் தங்களது நிலையை சரிசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.