நமதூர் புதுத்தெருவில் வசிக்கும் சரபுதீன் அவர்களின் மனைவி தெளலத் பேகம் ( வயது 39 ). இந்த ஏழை சகோதரியின் இருதய அறுவை சிகிச்சைக்காக நிதி உதவி கேட்டு கடந்த [ 17-07-2014 ] அன்று உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் சகோதரர்களிடம் வேண்டுகோள் விடப்பட்டது.
செய்தியை காண்க :
'இருதய நோயால் உயிருக்கு போராடும் அதிரை சகோதரிக்கு உதவிடுவீர் !
என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தியை வாசித்த நல்லுள்ளம் படைத்த சகோதரர்கள் இந்த ஏழை சகோதரியின் இருதய அறுவை சிகிச்சைக்காக நிதி உதவி அனுப்பி வருகின்றனர்.
இதில் சமூக ஆர்வலரும், தொடர்ந்து பல்வேறு மருத்துவ, வாழ்வாதார உதவிகளை தொடர்ந்து செய்துவரும் லண்டன் வாழ் அதிரையருமாகிய S.A இம்தியாஸ் அஹமது அவர்கள் அனுப்பிய ரூபாய் 28,500/- ஐ இன்று காலை இம்தியாஸ் அவர்களின் சகோதரரும், சமூக ஆர்வலருமாகிய இத்ரீஸ் அவர்களின் முன்னிலையில் சகோதரியின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுவரையில் சிகிச்சைக்காக நிதிஉதவி வழங்கிய சகோதரர்களுக்கு நன்றியையும் துவாவையும் கூறிக்கொள்வதாகவும், சென்னை அடையாறு மருத்துவமனையில் இன்று பகல் சகோதரிக்கு மேற்கொள்ளப்பட இருக்கும் இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்திட இறைவனிடம் இருகரமேந்தி பிரார்த்திக்கவும் சகோதரியின் குடும்பத்தினர் நம்மை அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர்.
குறிப்பு : இதுவரையில் சகோதரியின் குடும்பத்தினர் பெற்றுக்கொண்ட உதவிகள் குறித்த தகவல்கள் நன்றி அறிவிப்போடு விரைவில் தளத்தில் வெளியிடப்படும்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.