.

Pages

Sunday, August 24, 2014

அதிரையில் மாவட்ட ஆட்சியர் வழங்கிய விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி !

அதிரை கடற்கரைதெரு 8 வது வார்டு பகுதியை சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் வழங்கப்பட்டன.

இன்று  காலை கடற்கரை தெரு ஜும்மா பள்ளி அருகில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சுப்பையன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு விலையில்லா பொருட்களை வழங்கினார். குடும்ப அட்டைகள் உள்ள மொத்தம் 643 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் அமுதா ரவிசந்திரன், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சரோஜா மலை அய்யன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட இளைஞர் அணி செயலளர் ஜெய பிரகாஷ் நாராயணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் P.N. ராமசந்திரன், அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், அதிமுக சிறுபான்மை நல பிரிவு மாவட்ட செயலாளர் அதிரை அஜீஸ், நகர அதிமுக செயலாளர் பிச்சை, துணை செயலாளர் முஹம்மது தமீம், வார்டு கவுன்சிலர்கள் அப்துல் லத்திப், சிவக்குமார், உதயகுமார், அபூ தாஹிர், 14 வது வார்டு செயலாளர் ஹாஜா பகுருதீன், 8 வது வார்டு செயலாளர் சேனா மூனா என்கிற ஹாஜா முகைதீன், அதிமுக நகர சிறுபான்மை நலப்பிரிவின் தலைவர் அ.மு. அப்துல் ஜப்பார், ஏனைய அதிமுக பொறுப்பாளர்கள், அரசு அலுவலர்கள், கடற்கரை தெரு ஜமாத்தினர், தீனுல் இஸ்லாம் சங்க இளைஞர்கள் உள்ளிட்ட அப்பகுதி பொதுமக்கள் பெரும்திராளாக கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள் :
நூர் முஹம்மது ( நூவன்னா )






3 comments:

  1. கடற்கரை தெருவில் விரைவில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி இடைத் தேர்தலுக்காக அவசர கோலத்தில் பிற பகுதிகளை கவனத்தில் கொள்ளாமல் வழங்கியது கண்டிக்கதக்கது.

    மக்கள் இவர்களுக்கு எதிருவரும் தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

    ReplyDelete
  2. //அதிரை 8 வது வார்டு கடற்கரை தெரு பகுதி மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச மிக்சி, கிரைண்டர்,மின்விசிறி கொடுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.//

    யாருக்கும் விடுபடாமல் எல்லா வார்டுமக்களுக்கும் இந்த பொருட்களை கொடுக்க ஊரின் அரசியல் பிரமுகர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.