மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கல்லணையை வந்தடைந்தது. கல்லணையிலிருந்து டெல்டா சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து கடைமடை பகுதிகளில் தண்ணீர் தவழ்ந்து வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் அதிரையின் பாரம்பரியமிக்க குளங்களில் ஒன்றாக திகழும் செடியன் குளத்தை அதிரை பெரிய ஜும்மா பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மிகப்பெரிய பரப்பளவை கொண்ட இந்த குளத்தில் கடந்த காலங்களில் பொதுமக்கள் சாதி மத பேதமின்றி நீராடி மகிழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது. அதிரை பெரிய ஜும்மா பள்ளி நிர்வாகத்தின் பராமரிப்பில் இருந்து வருகிறது.
இது குறித்து செடியன் குளம் தூர் வாரும் பணிகளை உடனிருந்து கவனித்து வரும் அதிமுக சிறுபான்மை நல பிரிவின் நகர தலைவர் அ.மு. அப்துல் ஜப்பார் நம்மிடம் கூறுகையில்...
'காவிரி நீரை எதிர்பார்த்து வறண்டு காணப்படும் செடியன் குளத்தை பெரிய ஜும்மா பள்ளி நிர்வாக கமிட்டியின் சார்பில் குளத்தில் மண்டிக்கிடக்கும் முட்புதர்கள், குளத்தை சுற்றிக்காணப்படும் கருவை மரங்கள் ஆகியன ஜேசிபி இயந்திரத்தை கொண்டு அகற்றப்பட்டு வருகின்றன. குளம் உடையாமல் தடுக்க குளக்கரையை சுற்றி மணல் இட்டு பலப்படுத்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்து மூன்று நாட்கள் பணிகள் நடைபெறும்' என்றார்.
செடியன் குலத்திற்கு தண்ணிர் வரும் வாய்களை கொஞ்சம் தூர் வாரினால் வர கூடிய தண்ணிர் தங்கு தடையின்றி வந்து சேரும் அது மட்டும் இல்லாமல் அந்த வாய்களில் சாக்கடை தண்ணீரும் கலக்கும் அபாயம் இருக்கிறது அதையும் இபவே சரி செய்தால் நன்றாக இருக்கும்.
ReplyDelete