.

Pages

Thursday, August 14, 2014

இந்தியன் நேஷனல் ஆர்மியில் அதிரை சகோதரர்கள் !

இந்திய சுதந்திர போராட்டத்திற்காக நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு “ இந்தியன் நேஷனல் ஆர்மி ” ( INA ).
இந்த அமைப்பில் நமதூரை சேர்ந்த உடன் பிறந்த சகோதரர்களாகிய காலஞ்சென்ற பெரிய மின்னார் மு. முகம்மது ஷரிப் மற்றும் செய்யது முகம்மது ஆகியோர் பணி புரிந்து நமது நாட்டின் சுதந்திரத்திற்காக கடமையாற்றியவர்கள். இவர்களில் ஒருவர் சிங்கப்பூர் நாட்டின் குடியுரிமை பெற்றவர் மற்றொருவர் மலேசியா நாட்டின் குடியுரிமை பெற்றவர். இவர்கள் இதுவரையில் அரசிடமிருந்து எந்தவொரு சலுகையும் பெறாதது குறிப்பிடத்தக்கது.

மேலும் நமதூரைச் சேர்ந்த தியாகிகள் காலஞ்சென்ற S.S. இப்றாஹீம் மற்றும் அப்துல் ஹமீத் ஆகியோரும் நமது நாட்டின் சுதந்திரத்திற்காக தியாகம் செய்தது நமதூருக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.

இவர்களை போல் நமதூர் மற்றும் பிற பகுதிகளை சேர்ந்த எண்ணற்ற தியாகிகள் மறைந்து, மறைக்கப்பட்டு உள்ளார்கள். அன்னார்கள் அனைவரையும் கண்டறிந்து வரலாற்று ஏடுகளில் பதியப்பட வேண்டும்.

இந்தியா சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகள் கடந்துவிட்ட இந்நாளில் நமதூரைச் சேர்ந்த இத்தியாகிகளை நினைவில் கொள்வோம். மறைக்கப்படுவது, மறந்துவிடுவது, மறுக்கப்படுவது வரலாற்றில் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

6 comments:

  1. We wish each and every Indian citizen 68th Happy Independence Day 2014

    ReplyDelete
  2. மண்ணின் மைந்தர்களான இந்த தியாகிகளுக்கு நமது சமூதாயம் மற்றும் சமூக அமைப்புக்கள் என்ன செய்தது ???????????? சுபாஷ் சந்திர போஸின் இயக்கத்தை சாந்தோர் தனது உயிரை விட அதிகம் நேசித்தது நமது இந்திய திரு நாட்டையே ...இவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை இவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு இந்திய ராணுவத்தில் வேலை மற்றும் வறுமையில் வாடும் இவர்களின் வாரிசுகளுக்கு அரசாங்க நிதி உதவி ................

    ReplyDelete
  3. இந்தியாவின் சுகந்திர வரலாற்றின்
    முஸ்லிம்களின் பங்கை இருட்டடிப்பு
    செய்துவிட்டு சுகந்திர தின் பரிசாக தீவிரவாதம் என்ற முத்திரை குத்தப்பட்டுள்ளோம் கடந்த பல வருடங்களாக சுகந்திரதன காலங்களில்
    தீவரவாத அச்சுருத்தல் என்ற நாடகம் அறங்கேறி வருகிறது அதனால் மாநகரம்,நகரம் போன்ற இடங்களில் கூடுதல் பாதுகாப்பு இதனால் முஸ்லீம்களை மற்றவரகளால் குற்ற உணர்வுடன் பார்க்கும். பார்க்கும் பறிதாபதினமாக மாறிவிட்டது.

    ReplyDelete
  4. நம்ஊரைசார்ந்தINAவீரர்களில்சாயக்காரதெருவைசார்ந்தகாதர்சா என்பவரும்ஒருவர்..இவருக்குஅரசுமாதாமாதம்பென்சன் கொடுத்தது.இவர்சிங்கப்பூரில்நேத்தாஜிபடையில்சேர்ந்துசுதந்திரத்துக்கு போராடினார். ஊருக்குவந்துகுதிரைவண்டிஓட்டிபிழைத்தார்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.