AJ நகர் பொதுமக்களின் வேண்டுகோளுகிணங்கவும், அதிரை உலமா சபை மற்றும் அதிரை நகர ஜமாத்தினரின் ஒத்துழைப்புடனும் இன்று ( 22-08-2014 ) வெள்ளிக்கிழமை முதல் ஜும்மா தொழுகை துவங்க முடிவு செய்யப்பட்டதை அடுத்து இன்று முதல் வார ஜும்மா தொழுகை சிறப்பாக நடந்து முடிந்தது.
பேராசிரியர் பர்கத் அவர்களின் சிறப்புரையோடு துவங்கிய நிகழ்ச்சி தொடர்ந்து ஜும்மா பயான் நடைபெற்றது. இதில் இத்ரீஸ் ஆலிம் உரை நிகழ்த்தினார். இதனை தொடர்ந்து குத்பா உரை மற்றும் ஜும்மா தொழுகை நடைபெற்றது. இவற்றை பள்ளியின் இமாம் முஹம்மது ஹுசைன் நடத்தி வைத்தார்.
இதில் அதிரையை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், பல்வேறு பகுதியிலிருந்த வந்த பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வந்திருந்த அனைவருக்கும் பிரியாணி உணவு வழங்கப்பட்டது.
முன்னதாக தொழுகைக்கு வந்திருந்த அனைவருக்கும் குளிர் பானங்கள் வழங்கப்பட்டது. தொலை தூரத்திலிருந்து வந்த ஏராளமானோர் தங்களின் வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தி இருந்ததால் வாகன நெருக்கடி ஏற்பட்டது.
இடவசதிக்காக மேல் மாடியிலும், சாலையோரத்தில் போடப்பட்ட பந்தலிலும், புதிதாக கட்டப்பட்ட அல் ஹிதாயா மகதப் மதரசாவிலும் அமர வைக்கப்பட்டனர். பள்ளியின் நிர்வாகிகள் சார்பில் நிகழ்சிகள் அனைத்தும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
செய்தி மற்றும் படங்கள் :
ALHAMDULILLAH....
ReplyDeleteஜஜாக்கல்லாஹ்
ReplyDeleteAlhamdhulillah
ReplyDeleteஜஜாக்கல்லாஹ்
ReplyDeleteஜஜாக்கல்லாஹ்
ReplyDeletealhamdhurillah
ReplyDeleteMasha Allah
ReplyDelete