.

Pages

Friday, August 29, 2014

உலக மொழிகளில் தட்டச்சு செய்து உலக சாதனை புரிந்த 8 வயது சென்னை சிறுவன்!


50 மொழிகளில் தட்டச்சு செய்து 8 வயது சென்னை சிறுவன் மஹ்மூத் அக்ரம் உலக சாதனை புரிந்துள்ளார்.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, இத்தாலிக், கொரியா, அரபிக், ஃப்ரெஞ்ச், ஹீப்ரு உட்பட சுமார் 50 மொழிகளில் தட்டச்சு (Typing) செய்து சாதனை புரிந்த சிறுவன் அக்ரமின் அபாரத் திறமையை அறிந்த, யுனிக் உலக சாதனைகள் (Unique World Records) அமைப்பு, பலர் முன்னிலையில் சிறுவனின் சாதனனையை உலகுக்கு காட்ட முன் வந்தது.

அதன்படி மகமூத் அக்ரம் கடந்த அகஸ்ட் 24 அன்று பஞ்சாபின் பதிண்டா (Bathinda) என்ற இடத்தில் நடைபெற்ற யுனிக் உலக சாதனைகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கூடியிருந்த அனைத்து மீடியாவின் முன்பும், மற்றும் விழாவிற்கு வந்திருந்த அனைவரின் முன்பாகவும் மகமூத் அக்ரம் 50 மொழிகளிலும் தட்டச்சு செய்து எல்லோரையும் வியக்க வைத்தார்.

இதையடுத்து ‘WORLD’S YOUNGEST MULTILINGUAL TYPIST’ என்ற சாதனையாளர் விருதினை யுனிக் வேல்ர்ட் ரிக்கார்ட்ஸ் நிறுவனம் அக்ரமிற்கு வழங்கியது.

1 comment:

  1. வாழ்த்துக்கள்

    பிள்ளைகளால் இவ்வாறு இயலும் என்றால் ஏன் இது போன்ற சாதனை சூழலை நமது பிள்ளைகள் மத்தியில் ஆர்வத்தை ஏர்படுத்த வேண்டும். 2000 தில் அமெரிக்காவில் பிறந்த குழந்தை பிறைன்செல்லை ஆய்வு செய்யும் பொழுது வழக்கத்திற்கு மாறாக அதிகமாக 10% இருந்ததாகவும் , கருப்பு நிறம் மற்றும் எஸ்பானிஷ் (மெக்‌ஷிகன்) பிள்ளைகளை சோதித்ததில் அது போன்று 10% பிறைன்செல்கூடுதலாக இருந்ததாகவும் இது (God gift) எதிர்காலங்களில் வியக்கத்தக்க புதிய கண்டுபிடிப்புகளும்,அதுபோன்ற செயல்பாடுகள் இருக்கும் என்று ஆய்வறிக்கையின் கூற்று உண்மையாகிவிட்டது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.