இது தொடர்பில் பிரித்தானிய டெயிலி மெயில் ஊடகம் புதன்கிழமை செய்தியை வெளியிட்டுள்ளது. ஷமீம் (45வயது) மற்றும் கலீமா (27வயது) தம்பதியின் புதல்வரான கலீம் (8 வயது) சிறுவனே இவ்வாறு வழமைக்கு மாறான கரங்களை கொண்டுள்ளான். கலீம் பிறந்த போது அவனது கரங்கள் ஏனைய குழந்தைகளை விடவும் இரு மடங்கு பெரிதாக காணப்பட்டுள்ளது.
தற்போது அவனது கரங்கள் உள்ளங்கையிலிருந்து நடுவிரல் வரை 13 அங்குல நீளத்துக்கு வளர்ச்சியடைந்துள்ளது. மாதமொன்றுக்கு 15 ஸ்ரேலிங் பவுண் அளவான வருமானத்தை மட்டும் ஈட்டும் கலீமின் பெற்றோர் தமது மகனது கரங்களை அறுவை சிகிச்சை மூலம் வழமையான அளவுடையனவாக மாற்றும் பொருட்டு உதவியை கோரியுள்ளனர்.
மேற்படி இராட்சத கரங்கள் காரணமாக ஆடை அணிவது உள்ளடங்கலான தனது நாளாந்த கடமைகளை நிறைவேற்றுவதில் கலீம் இடையூற்றை எதிர்கொண்டுள்ளான். அத்துடன் அவனது அபிமான விளையாட்டான கிரிக்கெட்டை விளையாட தடையை எதிர்கொண்டுள்ளதுடன் சக சிறுவர்களின் கேலிக்கும் உள்ளாகியுள்ளான்.
எனினும், கலீம் மனம் தளாராது தனது இராட்சத கரங்களால் நாளாந்த கடமைகளை சிரமத்தின் மத்தியில் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கலீமுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பானது மருத்துவ வரலாற்றிலேயே அரிய நிகழ்வென உள்ளூர் மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவ கலாநிதி நாதன் தெரிவித்துள்ளார்.
பூரணமான குணம்மடைய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இறஞ்சுகின்றேன்
ReplyDeleteபிஸ்மில்லாஹ்ஹிற்றஹ்மான்னிற்றஹீம்
ثُمَّ كُلِي مِن كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا ۚ يَخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِّلنَّاسِ ۗ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ
“பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. 16:69