பட்டுக்கோட்டை தாலுக்காவில் உள்ள தம்பிக்கோட்டை வாய்க்கால், தம்பிக்கோட்டை வடகாடு வாய்க்கால், கல்யாண ஓடை வாய்க்கால், வெண்டாக்கோட்டை வாய்க்கால், ராஜாமடம் வாய்க்கால், நரசிங்கபுரம் வாய்க்கால், புதுக்கோட்டை உள்ளூர் செல்லிக்குறிச்சி ஏரி பாசன வாய்க்கால், நசுவினி ஆறு மங்கனங்காடு படுகை வாய்க்கால், மகாராஜபுரம் சித்தேரி அனைக்கட்டு வாய்க்கால், தொக்காலிக்காடு காமராஜ் அணைக்கட்டு வாய்க்கால், அலிவலம் வாய்க்கால் வேதபுரி அனைக்கட்டு வாய்க்கால் ஆகியன உள்ளது. இப்பகுதியை சுற்றி 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடைபெறும் விவசாயத்திற்கும், குளங்களுக்கும் வாய்க்கால்களில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரே முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.
நேற்று காலை பட்டுக்கோட்டை அருகே உள்ள வெண்டாக்கோட்டை காட்டாறு அணையிலிருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில் வறண்டு கிடக்கும் அதிரையின் அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் திறந்துவிடக்கோரி மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மனுக்களை அளிப்பதற்காக அதிரையிலிருந்து இன்று பிற்பகல் இரண்டு வாகனங்களில் தஞ்சை புறப்பட்டு சென்றனர். இதில் அதிரை பேரூராட்சி தலைவர் SH அஸ்லம், சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் சாலிஹு, மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கம் சார்பில் அதன் துணை தலைவர் PMK தாஜுதீன், செயலாளர் ஜபருல்லாஹ், ராஜிக், அதிரை TIYA தலைவர் ஜமாலுதீன், மன்சூர், சமூக ஆர்வலர்கள் அமீன், வீரையன், திமுக 19 வது வார்டு செயலாளர் நிஜாமுதீன் உள்ளிட்டோர் சென்றனர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட பொதுப்பணித்துறை அலுவலர் விரைவில் அதிரை பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை மேற்கொள்வதாக அவர்களிடம் உறுதியளித்துள்ளார்.
Super ji
ReplyDeleteசம்சுல் இஸ்லாம் சங்க தேர்தலை தள்ளிப்போடும் அளவுக்கு பதவிக்கு போட்டி போடுபவர்கள் அதிகமானவர்கள் இருந்தும் சங்கத்தின் சார்பாக ஒரு நிர்வாகிகள் கூட செல்லாலது வருத்தம் அளிக்கக்கூடியது தாஜீல் இஸ்லாம் சங்கத்தில் உள்ள நிர்வாகிகளை பார்த்து நம்முடை சங்கத்தினர் பாடம் படித்துக்கொள்ளுங்கள்
ReplyDeleteஒவ்வொருவரின் பொருப்புகளை பற்றி நாளை மறுமையில் அல்லாஹ் விசாரிப்பான் என்பதை என்னி செயல்படுங்கள்
This comment has been removed by the author.
ReplyDeleteஅஸ்ஸலாமு அழைக்கும்
ReplyDeleteமிகாவும் வரவேற்க வேண்டியது அதே போல தண்ணிர் வரும் கால்வாய்கலையும் இப்பவே சரிசெய்யது தடையின்றி குளங்களுக்கு தண்ணிர் வர முயற்சிகள் எடுக்கவும்.
அல்லாஹ் உங்களுக்கு அருள் பொழியட்டும்.