.

Pages

Tuesday, August 26, 2014

உண்ணாத உறவும், கேளாத கடனும் உருப்பட்டதாக சரித்திரம் கிடையாதுங்க.

உண்ணாத உறவும், கேளாத கடனும் உருப்பட்டதாக சரித்திரம் கிடையாதுங்க, அதுபோல, தூர்வாரி தண்ணீர் கொண்டு நிறைக்காத குளமும், சுத்தப்படுத்தி தண்ணீர் கொண்டு ஓடாத வாய்க்காலும் உருப்பட்டதாக சரித்திரம் கிடையாதுங்க, ஆமாங்க, நல்லா சிந்தித்து பாருங்க.

உறவு என்று ஒன்று இருந்தால்; அதை வாரத்தில் இருமுறையாவது ரீசார்ஜ் செய்துகொண்டே இருக்கணும், அதாவது அடிக்கடி போய் ஒரு கிளாஸ் தண்ணீராவது குடித்து கொண்டு வரணும்.

கடன் என்று ஒன்று இருந்தால், அதை அடிக்கடி கேட்டுக்கொண்டே இருக்கணும்.

குளம் என்று ஒன்று இருந்தால், அதை வருடத்தில் ஒருமுறையாவது தூர்வாரி சுத்தப்படுத்தி தண்ணீரை நிரப்பி தக்கவைத்துக்கொண்டே இருக்கணும்.

வாய்க்கால் என்று ஒன்று இருந்தால், அதை மாதத்தில் ஒருமுறையாவது சுத்தப்படுத்தி தண்ணீரை ஓடவிட்டுக்கொண்டே இருக்கணும்.

மேலே சொன்னபடி இல்லாவிட்டால்! உறவு, கடன், குளம், வாய்க்கால் இவை அனைத்தும் காணாமல் போய்விடும்.

ஊரை சுற்றி போக்குவரத்து சாலைகள் அமோகம், ஆனால் ஊரைச்சுற்றி இருந்த நீர் வரத்து வாய்க்கால்கள் எங்கே?

அதிரையில் உள்ள குளங்கள் அனைத்தும் தண்ணீரால் நிரம்பனும், அதிலும் நமக்கு குடிநீரை தினமும் கொடுத்துக் கொண்டிருக்கும் காட்டுக் குளப்பகுதியில் நீர்மட்டம் உயர வேண்டும். 

இப்போது நமது ஊரின் நிலை எப்படி இருக்கின்றது?

இப்படிக்கு.
K.M.A. ஜமால் முஹம்மது,
த/பெ. கோ.மு. முஹம்மது அலியார்.(மர்ஹூம்)
Consumer & Human Rights.
Thanjavur District Organizer, Adirampattinam-614701.
cosumer.and.humanrights614701@gmail.com

5 comments:

  1. ஊரின் நிலமையை எடுத்து உரைக்கும் நண்பர் ஜமால் அவர்களுக்கு
    நன்றி. வாழ்துக்கள்!!!.

    ReplyDelete
  2. எதுவுமே அடிக்கடி நினைக்காவிட்டால், நினைவுபடுத்தாவிட்டால் மறப்பது இயல்பே...

    அதுபோல் பராமரிக்காவிட்டால் வீணாகிவிடும்...

    நல்ல குணத்தையும் பராமரிக்காவிட்டால் அகன்றுவிடும். மழையும் மறுத்துவிடும்.

    ReplyDelete
  3. சிந்தனை தரும் கருத்துகள்...

    ReplyDelete
  4. ஜமால் காக்காவின் சிந்தனையே தனி ரகம்தான்.நாலுவரியில் சொன்னாலும் நச்சுண்டு சொல்லியிருக்கிறீர்கள். இனிமேல் உறவு,கடன் பழமொழி லிஸ்ட்டில் குளம் வாய்க்காலையும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

    புகைப் படத்தாத்தா மழைவருமாண்டு பாக்குற மாதிரியில தெரியிது..???

    ReplyDelete
  5. ஓடாத நதியும் தேடாத மனசும் தெளிவு பெறாது!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.