.

Pages

Friday, November 20, 2015

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ₹ 25 லட்சம் மதிப்பில் அறுவை சிகிச்சை கூடம் திறப்பு !

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.25 இலட்சம் மதிப்பில் அறுவை சிகிச்சை கூடம், உடனடி அறுவை சிகிச்சை பிரிவு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.

மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தொடங்கி வைத்து தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொது அறுவை சிகிச்சை பிரிவில் புதுப்பிக்கப்பட்ட கிருமித் தொற்றுள்ள நோயாளிகளுக்கான அறுவை சிகிச்சை கூடம், உடனடி அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் மாணவர்களுக்கான இரண்டு நேரடி அறுவை சிகிச்சை ஒளிப்பரப்பு மற்றும் விளக்கக்கூடம் மாண்புமிகு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ்  ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப் பட்டுள்ளது.

இதனால் உடனடி அறுவை சிகிச்சை பிரிவில் சிறிய அளவிலான அறுசை சிகிச்சைக்கு சுமார் 4 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் தங்க வேண்டிய சூழ்நிலை மாற்றி காலையில் மருத்துவமனைக்கு வந்து அறுவை சிகிச்சை முடிந்தவுடன் மதியம் வீட்டிற்கு திரும்பும் வசதி செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் இப்புதிய அறுவை சிகிச்சை மையத்தினை கவனித்து கொள்வார்கள். இப்பணியினை மேற்கொள்ளும் மருத்துவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

மேலும் ஊரக வளர்;ச்சித்துறை மூலம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு  செய்தார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர்.ம.சிங்காரவேலு, மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர் டாக்டர் இளங்கோவன், பேராசிரியர்கள் டாக்டர் சத்தியபாமா, டாக்டர் கே.மகாதேவன், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் திரு.சக்திமுருகன் மற்றும் உதவி பேராசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.