தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 10 மற்றும் 12 – ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா வழிகாட்டி மற்றும் விலையில்லா மடிக்கணினிகளை மாண்புமிகு வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் திரு. ஆர். வைத்திலிங்கம் அவர்கள் வழங்கினார். விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தலைமை தாங்கினார்.
118 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு 14 ஆயிரத்து 827 செட் விலையில்லா கல்வி வழிகாட்டி கையேடுகளையும், 29 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு 4153 விலையில்லா மடிக்கணினிகளையும் வழங்கி மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பேசியதாவது:
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். கல்வி மூலமாகத்தான் வறுமையை அகற்ற முடியும் என்பதால் கல்வித்துறைக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறார். இன்றைய சூழ்நிலைக்கேற்றார்போல் புதுமையான கல்விமுறைகளை வழங்கி வரும் மாண்புமிகு முதல்வர் அவர்கள் மடிக்கணினி திட்டத்தினை வழங்கி வருகிறார். கிராமங்களில் இருந்து வரும் மாணவ, மாணவியர்கள் நேரத்தை மிச்சப்படுத்த மிதிவண்டி திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார். மேலும் 14 வகையான உதவிகளையும் கல்விக்காக வழங்கி வருகிறார். கல்வியால் மட்டுமே ஒரு நாடு வளர்ச்சி பெறும் என்பதால் தேர்வுக்கு தயாராகும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா கல்வி வழிகாட்டி மாண்புமிகு முதல்வர் அவர்களின் உத்தரவிற்கிணங்க இன்று வழங்கப்படுகிறது. தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் தேர்வு எழுத தயாராக உள்ள மாணவää மாணவியர்களுக்கு வழிகாட்டி கையேடுகள் வழங்கப்படும். மாணவää மாணவியர்கள் இதுபோன்ற வாய்ப்புகளை பயன்படுத்தி அதிக மதிப்பெண்கள் பெற்று தமிழ் நாட்டிலேயே தஞ்சாவூர் மாவட்டம் கல்வியில் முதலிடம் பெற்றுத்தர கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பேசினார்.
முன்னதாக விழாவில் கோவை பொறியாளர் ஆர். விஜயகுமார் அவர்கள் மாணவ மாணவியர்களுக்கு புத்தாக்கல் மற்றும் நினைவாக்கல் பயிற்சியினை வழங்கினார். பயிற்சி வகுப்பில் மாணவ மாணவியர்கள் எவ்வாறு சிறப்பாக செயல்படுவது, படிப்பதை எவ்வாறு நிலைநிறுத்துவது, எவ்வாறு பழகுவது, அடுத்தவர்களுக்கு உதவும் பழக்கவழக்கங்கள், செய்யக்கூடாத தீய பழக்கங்கள் குறித்து மாணவ மாணவியர்களுக்கு எடுத்துரைத்தார். ஆசிரியர்கள் எவ்வாறு மாணவ, மாணவியர்களுக்கு போதிப்பது, வெளிக்கொணர வேண்டிய திறமைகள் குறித்தும் அறிவுரைகள் வழங்கினார்.
விழாவில் மாவட்ட ஊராட்சி தலைவர் திருமதி. அமுதாராணி ரவிச்சந்திரன், முதன்மைக்கல்வி அலுவலர். திருமதி.ரெ.திருவளர்ச்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் திரு.எஸ். மதிவாணன், நகர்மன்ற தலைவர் திரு.எஸ்.ஆர். ஜவகர்பாபு, ஒன்றியக்குழு தலைவர் திரு.குழ.சுந்தரராஜன், கல்வி புரவலர்கள் திரு.பி.என்.ராமச்சந்திரன், திரு. இரா.கார்த்திகேயன், நகர்மன்ற துணைத்தலைவர் திரு.வி.கே.டி.பாரதி, திரு.சுப. ராஜேந்திரன், கூட்டுறவு சங்கத்தலைவர்கள் திரு.உ.துரை.மாணிக்கம், திரு.சுப்ர மணியன், மத்திய கூட்டுறவு இயக்குநர் திரு.ஜெயபிரகாஷ் நாராயணன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு.மயில்வாகணன், ஆசிரியை, ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.