.

Pages

Friday, November 20, 2015

தெருநாய்களை கொல்ல சுப்ரீம் கோர்ட் அனுமதி !

தெருநாய்களை கொல்ல மும்பை மற்றும் கேரள உயர் நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்துக்கு உதவும் மூத்த வக்கீல் துஷ்யந்த் தாவே ஆஜராகி, ‘‘பாதிப்பை ஏற்படுத்தும் தெரு நாய்களை கொல்வதை பற்றி காந்தியே தெரிவித்துள்ளார்’’ என்றார்.  இதைத் தொடர்ந்து வழக்கில் இடைக்கால உத்தரவிட்ட நீதிபதிகள், ‘‘சமூகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வெறிப்பிடித்த நாய்களை கொல்லலாம். ஆனால், இதுதொடர்பான மத்திய அரசின் விதிமுறைகளை மாநிலங்கள் பின்பற்ற வேண்டும்’’ என்றனர்.

சுப்ரீம் கோர்ட் அனுமதியை அடுத்து அதிரை பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.