தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகில் உள்ள கருங்குளம் பாலத்தின் அருகே இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் வாகனங்களில் பயணித்த 5 பேருக்கு காயங்கள் ஏற்பட்டது. உயர் சிச்சைக்காக தஞ்சை மருதுவக்கல்லூரி மருத்துவமனையில் 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரது மகன் ரமேஷ் ( வயது 44 ). வாகன ஓட்டுனர். இவரது மனைவி சித்ரா ( வயது 35 ). இவர்கள் இருவரும் திருச்சியில் ராஜ்குமார் ( வயது 45 ), இவரது மனைவி காஞ்சனா ( வயது 42 ) இவர்களது மகன் ஆதேஷ்வர் ( வயது 10 ) ஆகியோரை ஏற்றிக்கொண்டு முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்புவானோடையில் உள்ள உறவினர் மேகாலா ( வயது 52 ) வீட்டில் தங்கிவிட்டு இன்று காலை அதிராம்பட்டினத்தில் உள்ள உறவினரின் வீடு குடிபுகுதல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டி ஈசிஆர் சாலையில் வாகனத்தில் வந்துகொண்டிருந்தனர். அதே சாலையில் இராமநாதபுரத்தில் இருந்து சென்னையை நோக்கி மற்றொரு வாகனம் வந்து கொண்டிருந்தது. வாகனத்தை முத்துப்பேட்டையை சேர்ந்த பகுருதீன் மகன் சீமான் ( வயது 28 ) ஓட்டினார். இந்த வாகனத்தில் முத்துப்பேட்டையை சேர்ந்த சாகுல்ஹமீது மகன் உமர் ( வயது 29 ) பயணித்தார். இரண்டு வாகனங்களும் அதிராம்பட்டினம் அருகில் உள்ள கருங்குளம் பாலம் அருகே வந்த போது எதிரே வந்த வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சீமானுக்கு மார்பு பகுதியிலும், ரமேஷுக்கு முகம், கால், மார்பு பகுதிகளிலும், ராஜ்குமாருக்கு இடுப்பு, கால், மார்பு பகுதிகளிலும், மேகலாவிற்கு தலை, காலிலும், ஆதேஷ்வரருக்கு வயிற்றிலும் காயங்கள் ஏற்பட்டது.
தகவலறிந்த அதிராம்பட்டினம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், உதவி ஆய்வாளர் ரவீந்தரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ஜீவானந்தம் சம்பவ இடதிற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். காயங்கள் அடைந்தவர்களை மீட்டு தமுமுக ஆம்புலன்ஸில் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயமடைந்த சீமான், ரமேஷ், ராஜ்குமார் ஆகியோர் உயர் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தமுமுக ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து தொடர்பாக வாகன ஓட்டுனர் ரமேஷ் அளித்த புகாரின் பேரில் அதிராம்பட்டினம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜீவானந்தம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சேதமடைந்த இரண்டு வாகனங்களும் காவல்நிலையத்திற்கு கொண்டு வர ஏற்பாடு நடந்து வருகிறது. இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகள் நடந்துவருவதால் காவல்துறையின் சார்பில் வாகன வேகத்தடுப்புகள் அமைக்க வேண்டும் எனவும், அரசின் சார்பில் 108 ஆம்புலன்ஸ் சேவை வசதியை இந்த பகுதியில் தயார் நிலையில் நிறுத்திவைக்க வேண்டும் எனவும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க கூடுதல் மருத்துவர்கள், போதிய முதலுதவி உபகரணங்கள், உயிர் காக்கும் மருந்துகள் ஆகிய வசதிகளை அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் ஏற்படுத்த வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அஸ்ஸலாமு அழைக்கும்
ReplyDeleteஇன்று காலை அதிரை அருகே வாகன விபத்து என்று அதிரை எக்ஸ்பிரெஸ் &அதிரை நியுஸ் இரு வலைதளங்களிலும் செய்தி வந்துள்ளது .இரண்டு வலைதளங்களிலும் ஒரே வாகன விபத்தை .முன்னுக்கு பின் முரணாக போட்டு உளார்கள் .இதற்கு இடையில் தமுமுக மூத்த தலைவர் சகோதரர் ஹைதர் அலி அவர்கள்.வீடியோ பதிவில் பேட்டி கொடுக்கிறார் .
எனவே வாகன விபத்துக்குள்ளான அனைத்து சகோதர்ரர்களும் நலம் பெற துவா செய்தவனாய் ஆமீன்.
குறிப்பு: இதில் எந்த வலைத்தளம் சொல்வது உண்மை .
நிஜாம்,
ReplyDeleteஇது பதிவு மாறாட்டமா? அல்லது, கருத்து மோதலா? அல்லது.....?