.

Pages

Sunday, November 22, 2015

துபாயில் மனிதநேய மக்கள் கலாச்சார பேரவைக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு !

துபாயில் தமீமுன் அன்சாரி தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சியினர் நடத்திய கூட்டத்தில் மனிதநேய மக்கள் கலாச்சார பேரவை - துபாய் மண்டலத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இக்கூட்டத்தில் அமீரக மனிதநேய கலாசார பேரவை ஒருங்கிணைப்பாளர் மதுக்கூர் அப்துல் காதர் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவாளர் கீழக்கரை ஜமீல் சிறப்பரை நிகழ்த்தினார்.

கூட்டத்தின் மத்தியில் காணொளி காட்சி மூலம் தமிமுன் அன்சாரி உரை நிகழ்த்தினார். இதையடுத்து மனிதநேய மக்கள் கலாச்சார பேரவை- துபாய் மண்டலத்தின் நிர்வாக தேர்வு நடைப்பெற்றது.

இதில் துபாய் மண்டலத்திற்கு கீழ்கண்ட நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
செயலாளர்: எஸ்.எம்.யூசுப்ஷா
பொருளார்: ஒய். அப்துல் ரெஜாக்
துணைச்  செயலாளர்கள்: இஸ்மாயில் பாபு, சபீக்குர் ரஹ்மான், அஜ்மல்
மண்டல ஒருங்கிணைப்பாளர்களாக: ஓய்.எம்.ஜியாவுல் ஹக், செய்யதுல்லா
செயற்குழு உறுப்பினர்கள்: ஜாகிர் உசேன், மாஹீர், ஜின்னா, சைப்புதீன், ஜாகிர், ஹர்பீன், பீர் முகமது, பாஷா

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம்-1
மனிதநேய மக்கள் கலாச்சார பேரவையை வளைகுடா நாடுகளிலும் பிற உலக நாடுகளிளும் நிறுவிய மாநில தலைமைக்கு இக் கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் -2
தத்தளிக்கும் தமிழகத்தில் மழை வெள்ள நிவாரண பணிகளை விரைவாக செய்து வரும் மனிதநேய மக்கள் கட்சிக்கும், தாய் கழகம் தமுமுக மற்றும் பிற சமுதாய அமைப்புகள் அரசியல் கட்சிகளுக்கும் நன்றியை தெரிவிப்பதோடு, ஆமை வேகத்தில் நடைபெறும் அரசு நிவாரண பணிகளை அசுர வேகத்தில் செயல்படுத்திட தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது,

தீர்மானம் -3
கேரளா போன்ற பிற மாநிலத்தில் உள்ளது போல் நம் தமிழகத்திலும் வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் கருதி தனி ஆணையம் அமைக்க ஆவணம் செய்ய வேண்டும் என இக்கூட்டம் தமிழக அரசினை கேட்டுக்கொள்கிறது.

செய்தி மற்றும் படங்கள்:
அதிரை அஸ்ரப் அலி
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.