.

Pages

Saturday, November 28, 2015

கோரிக்கைகள் நிறைவேற்றி தரும் அரசு அலுவலர்களுக்கு போஸ்ட் கார்டில் நன்றி தெரிவிக்கும் அதிரை ஆர்வலர் !

அதிரையை சேர்ந்தவர் ஹாலிக். சமூக ஆர்வலரான இவர் அதிரையின் பிராதன பகுதிகளில் பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வான மின்கம்பிகள், குடியிருப்பு பகுதிகளில் எரியாத மின் விளக்குகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்களின் கவனத்திற்கு எடுத்துச்செல்லும் விதமாக பிரபல நாளிதழ் பத்திரிகைகள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் ஆகியோருக்கு போஸ்ட் கார்டில் கோரிக்கைகளை எழுதி அனுப்பி நடவடிக்கைகள் எடுக்க கேட்டுக்கொண்டு வருகிறார். இவரது கோரிக்கைகள் பத்திரிகைகளிலும் பிரசுரமாகி வருகிறது.

இந்த புதிய முயற்சியால் ஊருக்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது. இவரது கோரிக்கைகள் சில நிறைவேற்றப்பட்டதை அடுத்து சம்பந்தபட்ட அரசு அலுவலர்களுக்கு குறிப்பாக மாவட்ட ஆட்சியர், மின்சார வாரிய செயற் பொறியாளர் உள்ளிட்டவர்களுக்கு போஸ்ட் கார்டில் தனது கைப்பட நன்றி தெரிவித்து கடிதங்கள் எழுதி அனுப்பி வருகிறார். சுயநலமில்லாத இவரது பொதுநலத்தை அதிரையர் பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 

10 comments:

  1. இவர்தாம்பா அடுத்த 13 வது வார்டின் மெம்பர்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. இவர் சிறு வயதிலிருந்து ஆர்வமிக்கவர். வார்டு மெம்பராக ஆவதற்கு ஒரு முறை முயற்சி செய்தும் இவர் தவித்துவிட்டார்

    ReplyDelete
  4. தவிர்த்துவிட்டார் என்று படிக்கவும்

    ReplyDelete
  5. நானும் அதைத்தான் நினைத்தேன். அவரை ஏன் நீங்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கக்கூடாது.

    ReplyDelete
  6. இவரின் பொது தொண்டுகள் சிறக்க வாழ்த்துக்கள். ஏன் காக்கா ஹாலிக் அவர்களை தெரு கவுன்சிலாரக தேர்ந்தெடுக்க கூடாது என்று கூறுகின்றனர்.
    இதேபோல் சாதாரணமாக பொது தொண்டுகள்செய்தால் போதும்,ஊரில் இருக்கும் ஏனைய கவுன்சிலர்கள் பொது சேவைகளில் ஈடுபடுகிறார்களா என்று பார்க்கவும்.

    ReplyDelete
  7. நானும் அதைத்தான் நினைத்தேன். அவரை ஏன் நீங்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கக்கூடாது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.