.

Pages

Thursday, November 26, 2015

மறைந்த திமுக அதிரை அவைத்தலைவர் குடும்பத்தினருக்கு முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ் பழனிமாணிக்கம் நேரில் சந்தித்து ஆறுதல் !

திமுக அதிரை அவைத்தலைவரும், அதிரை பேரூராட்சி 13 வது வார்டு உறுப்பினருமாகிய ஹெச். அப்துல் காதர் அவர்கள் நேற்று முன்தினம் காலமானார்.  இவரது இறுதி சடங்கு நேற்று பகல் நடைபெற்றது.

இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமாகிய எஸ்.எஸ். பழனிமாணிக்கம் மறைந்த ஹெச். அப்துல் காதர் அவர்களின் இல்லத்திற்கு இன்று இரவு நேரிடையாக சென்று குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினார்.

அப்போது திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம குணசேகரன், பட்டுக்கோட்டை ஒன்றிய பிரதிநிதி முல்லை மதி, இணைச்செயலாளர்கள் அன்சர்கான், தில்லைநாதன், கவுன்சிலர்கள் நூர்லாட்ஜ் செய்யது, என்கேஎஸ் முஹம்மது செரீப் ஆகியோர் உடனிருந்தனர்.
 
 
 
 
 
 

2 comments:

  1. Aduththa avai thalaivar
    noor ladge syead

    ReplyDelete
  2. அடுத்த அவை தலைவர் பதவி. காலம் காலமாக திமுகாவில் இருந்த முன்னால் அவை தலைவர் LVS பாட்சா மரைக்காயர் அவர்களின் பேரன் மரைக்கா இத்ரிஸுக்கு குடுக்கலாம்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.