இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. இந்த மழையால் புஹாரி வீட்டு சுவர் முழுவதும் நனைந்திருந்தது. அவரது வீடு கூரை வீடு ஹாலோ பிளாக் கல்லால் சுவர் எழுப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நள்ளிரவு சுமார் 12 மணியளவில் புஹாரி வீட்டின் உட்புற சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த புஹாரி மற்றும் தவ்லத் பீவி ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதில் இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டு தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர், சேதுபாவா சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். சுவர் இடிந்து விழுந்த போது ஷபானா, அப்துல்லா ஆகியோர் வீட்டின் மற்றொரு பகுதியில் படுத்திருந்ததால் காயமின்றி உயிர் தப்பினர். இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteமிகவும் தெளிவான செய்திகளும் அழகான வரிகளிலும் அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார செய்திகளை, பதிவு செய்துவருகிறீர்கள்
அதைப்போன்று எங்களது ஊரில் நடைப்பெற்ற சம்பவத்தை சுட்டிக் காட்டியதற்கு, ஸலாத்தினை தெறிவித்துக்கொள்கிரேன்
இன்னும் மென்மேலும் வளர எல்லாம் வல்ல அல்லாஹ் நல் அருள் புரிவானாக