.

Pages

Saturday, November 21, 2015

அதிரை பேரூந்து நிலைய ஒட்டுமொத்த வாகன ஓட்டுனர்கள் SDTU அணியில் இணைந்தனர்!

அதிரை பேரூந்து நிலைய கார் - ஆட்டோ வாகன ஓட்டுனர்கள் எஸ்டிபிஐ கட்சியின் ஒரு அங்கமாகிய தொழிற்சங்கப்பிரிவு அணியில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர்.

எஸ்டிபிஐ கட்சி அதிரை நகர தொழிற்சங்க பிரிவின் [ எஸ்டிடியூ ] சார்பில் அதிரை பேரூந்து நிலையம் அருகே உள்ள பவித்ரா திருமண மண்டபத்தில் புதிய உறுப்பினர்களை எஸ்டிடியூ அணியில் இணைக்கும் இணைப்பு விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் எஸ்டிடியூ மாநில துணை தலைவர் திருச்சி சம்சுதீன், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ் தலைமை வகித்தார். எஸ்டிடியூ தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் பட்டுக்கோட்டை அமானுல்லா, பிஃஎப்ஐ பட்டுக்கோட்டை டிவிசன் பிரசிடண்ட் வழக்கறிஞர் நிஜாம், எஸ்டிபிஐ கட்சி அதிரை நகர தலைவர் முஹம்மது அஜார், எஸ்டிபிஐ நகர துணை தலைவர் நடராஜ், எஸ்டிபிஐ நகர செயலாளர் முஹம்மது இக்பால் ஆகியோர் முன்னிலையில் அதிரை பேரூந்து நிலைய கார் - டெம்போ - ஆட்டோ வாகன ஓட்டுனர்கள் நல சங்க ஒட்டுமொத்த உறுப்பினர்கள் எஸ்டிபிஐ கட்சியின் தொழிற்சங்கப் பிரிவில் இணைத்துக்கொண்டனர். இதையடுத்து எஸ்டிபிஐ கட்சியினர் பலரும் புதிதாக இணைந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இணைப்பு விழாவின் போது, அதிரை டாக்ஸி ஸ்டான்ட் தொடர்பாக பேரூந்து நிலைய வாகன ஓட்டுனர்கள் சார்பில் கோரிக்கை மனு ஒன்றை கட்சி நிர்வாகிகளிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட நிர்வாகிகள் இதுதொடர்பாக கட்சி தலைமை நிர்வாகிகளின் கவனத்திற்கு எடுத்துச்சென்று கோரிக்கை மனு மீது உரிய நடவடிக்கை துரிதமாக மேற்கொள்வதாக உறுதி அளித்தனர்.
 
 
 
 
 
 
 
 

1 comment:

  1. புதிதாக கட்டிய வேன் - கார் நிறுத்தும் இடத்துக்கு இவர்கள் ஷிப்ட் செல்வது கஷ்டம் தான். அரசியலாக்கப் பட்டுவிட்டது அதோடு பொது மக்கள் பணம் விரயம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.