.

Pages

Thursday, November 19, 2015

அதிரை காட்டுப்பள்ளி தர்ஹாவின் முகப்பு பகுதியை பூட்டு போட்டு பூட்டியதால் பரபரப்பு !

அதிரையை சேர்ந்தவர் உபைதூர் ரஹ்மான் ( வயது 30 ). இவர் காட்டுப்பள்ளி தெருவில் வசித்து வருகிறார். இதே பகுதியில் அமைந்துள்ள செய்கு நசுருதீன் வலியுல்லா தர்ஹாவின் முகப்பு பகுதியில் உள்ள வளாகத்தில் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு சிலர் உறங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தவர் தர்ஹாவின் முகப்பு வாசல் பகுதியை பூட்டு போட்டு பூட்டி உள்ளார். இதனால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பூட்டு போட்டு பூட்டியது குறித்து உபைதூர் ரஹ்மான் நம்மிடம் கூறுகையில்...
'தர்ஹாவின் வளாகத்தில் தினமும் இரவு நேரங்களில் சிலர் மது, கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்த்துகளை சாப்பிட்டுவிட்டு படுத்து உறங்குகின்றனர். போதையில் உறங்கும் போது இவர்களின் ஆடைகள் விலகி காணப்படுகிறது. இதனால் மிகவும் அருவருப்பாக உள்ளது. இதுபோன்ற ஒழுக்க சீர்கேட்டை அனைவரின் கவனத்திற்கு எடுத்துச்செல்லும் விதமாக தர்ஹாவின் நான்கு பக்கங்களின் வாசல் பகுதிகளை பூட்டுகள் போட்டு பூட்டினேன்.

இரவு நேரங்களில் தர்ஹாவில் யார் யார் வந்து படுத்து உறங்குகிறார்கள் என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை பிடித்து காவல்துறை வசம் ஒப்படைக்க வேண்டும்' என்றார்.
 

7 comments:

  1. தர்ஹா (கோவில் என்று அதிரையர்களால் செல்லமாக அழைக்கப்படும் ) இந்த வழிகேட்டை ஒழித்து விட்டால் இந்த பிரச்சனைக்கு வழியில்லை

    ReplyDelete
  2. Vadaiyai sappeda sonna
    otdaiyai annukerar
    ?????????

    ReplyDelete
  3. நல்ல செயல் ஆனால் அரசியல் ஏஜெனட் போல் செயல்படும் MMஇப்ராஹீம் முந்தைய ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகளை மக்களுக்கு எடுத்து சொல்ல தயாரா????

    ReplyDelete
  4. புயல் , அடை மழை இயற்க்கை சீற்றம் ஏற்படும் பொழுதெல்லாம் ஏழைக்களுக்கு தங்குமிடமாக தர்கா விளங்கியது இப்போ சமூக விரோதிகளுக்கு புகலிடமாக இருப்பது நிர்வாகத்தின் குறைப்பாடு; நிவர்த்தி பண்ண வேண்டும் இல்லையேல் பட்டா போட்டு விடுவாங்க. 600 ஆண்டு கடந்து விட்டது இப்ப வந்தவர்கள் இடிக்கனும் - ஒலிக்கனுமென்ட்ரால் நடக்க கூடிய விசயமா. சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும்.... அதெல்லாம் சத்தியாமா என்றால் ?????

    ReplyDelete
  5. Mr. Ahamed Naiyum, Please post related comments

    ReplyDelete
  6. நல்ல செயல்.. ஆயினும் பள்ளிவாசல் (தொழும் இடத்திற்கு) செய்ய வேண்டிய மரியாதையை (கண்ணியத்தை) இந்த தர்காக்களுக்கு செய்வது தவறு என்று கருதுகிறேன்..

    எனினும்.. வாழ்த்துக்கள் உபைதூர் ரஹ்மான்..

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.